மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுப்பதற்காகவே பா.ஜ.க. அரசு செயல்படுகிறது... பூபேஷ் பாகல்

 
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுப்பதற்காகவே பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என்று இமாச்சல பிரதேச மக்களிடம் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டினார்.

இமாச்சல பிரதேசம் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், டிசம்பர் 8ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

ராகுல் காந்தி

இமாச்சல பிரதேசம் சோலனில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகல் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பூபேஷ் பாகல் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் உங்களுக்கு 10 உத்தரவாதங்களை அளித்துள்ளது. நாங்கள் எப்படி வெற்றி பெறுவோம் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். விவசாயிகளின் கடன்களை 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்வதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்த சத்தீஸ்கரில் இருந்து வந்துள்ளேன். எவ்வாறாயினும், நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது, நாங்கள் அதை (விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி)  10 நாட்களுக்குள் அல்லது 10 மணி நேரத்துக்குள் அல்ல, 2 மணி நேரத்திற்குள் செய்தோம். 

பா.ஜ.க.

மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுப்பதற்காகவே பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் பி.என்.ஜி. ஆகியவற்றின் விலையை உயர்த்துவதன் மூலம் அதை செய்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது அவர்கள் ரொட்டி மற்றும் பரோட்டா மீது ஜி.எஸ்.டி.யை விதித்துள்ளனர். காங்கிரஸை அமோக பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.