அரவிந்த் கெஜ்ரிவாலும், அசாதுதீன் ஓவைசியும் பா.ஜ.க.வின் பி மற்றும் சி டீம்.. பூபேஷ் பாகல் குற்றச்சாட்டு

 
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

அரவிந்த் கெஜ்ரிவாலும், அசாதுதீன் ஓவைசியும் பா.ஜ.க.வின் பி மற்றும் சி அணியாக வேலை செய்கிறார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பூபேஷ் பாகல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இமாச்சல பிரதேச மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை நிராகரித்தார்கள், பின்னர் அவர் குஜராத்தை அடைந்தார். குஜராத் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலையும் நிராகரித்தனர். இப்போது அவர் டெல்லியின் மாநகராட்சி தேர்தலில் இருக்கிறார்.  

அரவிந்த் கெஜ்ரிவால்

தெளிவாக அரவிந்த் கெஜ்ரிவாலும், அசாதுதீன் ஓவைசியும் பா.ஜ.க.வின் பி மற்றும் சி அணியாக வேலை செய்கிறார்கள். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும். குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. இரண்டமாட் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத் மக்கள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தால் கலக்கமடைந்துள்ளனர். 

அசாதுதீன் ஓவைசி

எனவே பொதுமக்கள்  தங்கள் பிரச்சினைகளுக்கு வாக்களிப்பார்கள். இமாச்சல பிரதேசத்திலிருந்து காங்கிரஸூக்கு நல்ல அறிகுறிகள் உள்ளன. இமாச்சல பிரதேச மக்கள்  காங்கிரஸூக்கு  வாக்களித்துள்ளனர். டிசம்பர் 8ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்படும் என்று நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.