அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பொய்யரை நாங்கள் பார்த்ததில்லை... குஜராத் பா.ஜ.க. தலைவர்.

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பொய்யரை நாங்கள் பார்த்ததில்லை என்று குஜராத் பா.ஜ.க. தலைவர் பி.ஆர்.பாட்டீல்  குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்துக்கு அடிக்கடி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். குஜராத்தில் நேற்று நடைபெற்ற கூட்டங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பங்கேற்றார்.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று குஜராத்தில் கூட்டங்களில் பேசுகையில் கூறியதாவது: நான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று பிறந்தேன். கன்சாவின் சந்ததிகளான ஊழல்வாதிகள் மற்றும் குண்டர்களை ஒழிக்க கடவுள் என்னை சிறப்பு பணியுடன் அனுப்பியுள்ளார். கடவுள் கொது்த இந்த பணியை அனைவரும் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

பா.ஜ.க.

குஜராத் பா.ஜ.க. தலைவர் பி.ஆர்.பாட்டீல்  இது தொடர்பாக கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பொய்யரை நாங்கள் பார்த்ததில்லை. முதல்வராக இருந்தும் அவர் பொய்களை பேசுகிறார். குஜராத் மக்களை கன்சா என்று அழைத்தார். பின்னர் அவர் அவர்களிடம் வாக்கு கேட்கிறார். பேசுவதற்கு முன் அவர் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.