எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்... பகவந்த் மான்

 
பகவந்த் மான்

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் தெரிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்பட அனைத்து கட்சிகளும் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவருமான பகவந்த் மான் கலந்து கொண்டார்.

ஆம் ஆத்மி

அந்த கூட்டத்தில் பகவந்த் மான் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. ஆட்சியில் இருந்து அகற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக ஆணை வழங்க குஜராத் மக்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது. எதிர்க்கட்சிகள் ஆம் ஆத்மியை மற்றவர்களின் பி அணி என்று பெயரிட்டு கேவலப்படுத் முயற்சிக்கின்றன. ஆனால் ஆம் ஆத்மி குஜராத் மக்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் கட்சி. ஆம் ஆத்மி  தங்களின் நேர்மையான மற்றும் மக்கள் சார்பு அணுகுமுறையால் அமைப்பில் உள்ள பத்தாண்டு கால பழமையான அசுத்தங்களை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியாவை முதலிடத்திறகு கொண்டு வர முன் வருகிறது. 

பா.ஜ.க.

மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததற்கு பா.ஜ.க.வே காரணம். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்தனர். ஆனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்பதற்கு பேரணிகளில் பெரும் திரளான கூட்டமே சாட்சி. மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ள பெரிய வரவேற்பால் பா.ஜ.க. குழப்பமடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.