உடன் இருப்பது எல்லாம் உதவாக்கரைகள்! ஆனால் பழனிச்சாமிக்கு பேச்சு மட்டும்.. - திமுக விளாசல்

 
e

ஆயிரம் பேர் எதற்கு? பழனிச்சாமி ஒருவரே போதாதா அதிமுகவை அளிப்பதற்கு? என்று முரசொலி நாளிதழில் தலையங்க கட்டுரை அமைந்திருக்கிறது.   ஆயிரம் மு. க. ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னதற்கு இவ்வாறு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது .

‘அம்மா இறந்த நன்னாளில்..’ என்று உறுதி எடுத்துக்கொண்ட சேலத்து சேக்கிழாரின் சமீபகால உளறல்ளுக்கு அளவே இல்லை . தனது ஆட்சி காலம் தான் பொற்காலமாம்.  அதிமுகவை அளிக்க முடியாதாம்.   வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.  ஜெயலலிதா மறையும் போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது.  பழனிச்சாமி காலத்தில் ஆட்சி பறிக்கப்பட்டது. 

ep

 ஜெயலலிதாவின் காலத்தில் தமிழக நாடாளுமன்றத்தின் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கையில் வைத்திருந்தது . பழனிச்சாமி காலத்தில் 39இல் ஒன்றே ஒன்று மட்டும் தான் இருக்கிறது.   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோற்றார் பழனிச்சாமி. கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் தோற்றார் பழனிச்சாமி.  இதுதான் பழனிச்சாமியின் அரசியல்  ஜாதகம் .

இந்த லட்சணத்தில் அவர் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று பேசுவது வெட்டிப் பேச்சு. அதிமுக என்கிற ஊசிப்போன தோசை இன்று நான்காக இருக்கிறது.  கால் பங்கு பழனிச்சாமிடம்,  கால் பங்கு பன்னீர் இடம்,  கால்பங்கு சசிகலாவிடமும்,  கால்பந்து தினகரனிடம் இருக்கிறது. ஒரு ஒட்டுத்துண்டு தீபாவிடம்.  இதுதான் இன்றைய அதிமுக .

ஜெயலலிதாவுக்கு பின்னால் கட்சிக்கு தலைமை தாங்கிய பழனிச்சாமியின் கையாலாகாத தனத்தின் அடையாளம் தான் இத்தனை உடைசல்கள்.  ஒரே ஒரு அதிமுகவை நான்கு அ.தி.மு.க ஆக்கியதுதான்  பழனிச்சாமியால் முடிந்த சக்தி.   சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்றவர் பழனிச்சாமி.  பதவிக்கு வந்ததும் தினகரனுக்கு ராதாகிருஷ்ணன் தொகுதியில் வாக்கு கேட்டார்.  பின்னர் அவரை கழற்றி விட்டார் . சசிகலாவின் காலை வாரினார்.  பன்னீர் செல்வத்துக்கு தூது அனுப்பி அவரை சேர்த்துக் கொண்டார். பாஜகவின் பாதம் தாங்கி நாற்காலியை வலிமைப்படுத்திக் கொண்டார்.  அதன் பின்னர் பன்னீரையும் கழற்றி விட்டார்.  இப்போது உடன் இருப்பது அனைத்தும் தன்னை போலவே உதவாக்கரைகள்.  இத்தகைய தக்கைகளை வைத்துக்கொண்டு தலையால் நடந்து வருகிறார் பழனிச்சாமி. ஆனால் பேச்சு மட்டும் பண்ணையார் தனத்தின் பசப்புத்தனங்கள்.

அதிமுகவையும் தமிழ்நாட்டையும் பாதாளத்துக்கு தள்ளிவிட்டார் பழனிசாமி . அதனால்தான் ஜெயலலிதா ஆட்சியை சீரழிவு என்றும்,  பழனிச்சாமி ஆட்சியை பேரிடர் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஒற்றைச் சொன்னால் அடையாளப்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.