தினமும் கூடுதலாக 2 மணி நேரம் உழைத்து மாநில வளர்ச்சிக்காக அதிக நேரத்தை செலவிடுவேன்... கர்நாடக முதல்வர் பொம்மை

 
பசவராஜ் பொம்மை

தினமும் கூடுதலாக 2 மணி நேரம் உழைத்து மாநில வளர்ச்சிக்காக அதிக நேரத்தை செலவிடுவேன் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றுவது குறித்த ஊகங்கள் மற்றும் அவரை பொம்மை (கைப்பாவை) முதல்வர் என்றும் அம்மாநில காங்கிரஸ் கடந்த சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் தொடர்ந்து டிவிட் செய்து வந்தது. இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸார் இப்படி டிவிட் செய்வது இது முதல் முறையல்ல. அவர்களுக்கு (காங்கிரஸ்) ஒரு உணர்வு இருக்கிறது. அவர்கள் மனதில் உறுதியற்ற தன்மை உள்ளது, அதை அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடையே பரப்ப விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். 

காங்கிரஸ்

எல்லாவற்றையும் விட நான் நிலையான ஞானம் கொண்ட மனிதன், ஏனென்றால் நான் உண்மையை அறிந்திருக்கிறேன். மேலும் இது போன்ற  பேச்சுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை, ஏனெனில் அவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள். இது போன்ற பேச்சுக்கள் தான் எனது முடிவை உறுதியானதாகவும்,  மாநிலத்துக்காகவும், மக்களுக்காகவும் அதிகமாக உழைக்கத் தூண்டுகிறது. உண்மை என்னவென்றால், நிலையான அரசாங்கம் உள்ளது, அது தொடர்ந்து நிலையானதாக இருக்கும். நான் மிகவும் கடினமாக உழைக்க முடிவு செய்துள்ளேன். 

பி.எஸ்.எடியூரப்பா

வரும் நாட்களில் தினமும் கூடுதலாக 2 மணி நேரம் உழைத்து மாநில வளர்ச்சிக்காக அதிக நேரத்தை செலவிடுவேன். கட்சியை வலுப்படுத்தவும் நாடு பாடுபடுவேன், நாங்கள் பெரிய அளவில் மக்களிடம் செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் பலமாக கருதப்படுவருமான பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்வார் என தெரிவித்தார்.