காங்கிரஸ் கேவலமான அரசியலுக்கான நுழைவாயில்... கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி

 
மேகதாது அணை- தமிழகத்தில் மேல்முறையீட்டை சந்திக்க தயார்: பசவராஜ் பொம்மாய்

காங்கிரஸ் கேவலமான அரசியலுக்கான நுழைவாயில் என்று பா.ஜ.க.வை விமர்சித்த காங்கிரஸின் தினேஷ் குண்டு ராவுக்கு பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் குற்றப் பின்னணி கொண்டவர் என்று கூறப்படும் கே.எஸ். மஞ்சுநாத் என்ற சாண்ட்ரோ ரவி என்பவர் பா.ஜ.க. தொண்டர் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தினேஷ் குண்டு ராவ் டிவிட்டரில், சாண்ட்ரோ ரவி தன்னை ஒரு பா.ஜ.க. தொண்டர் என்று கூறினார். இப்படிப்பட்டவர்கள் பா.ஜ.க.வில்தான் இருக்க முடியும். பா.ஜ.க.வில் ஏமாற்றுக்காரர்கள்,  பேராசைக்காரர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் பாலியல் கொள்ளைக்காரர்கள் நிறைந்துள்ளனர். கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், கருத்துக்கள் பற்றி பேச கபட பா.ஜ.க. தலைவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என பதிவு செய்து இருந்தார். 

தினேஷ் குண்டு ராவ்

பா.ஜ.க.வை விமர்சித்த தினேஷ் குண்டுராவுக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். பசவராஜ் பொம்மை இது தொடர்பாக கூறியதாவது: காங்கிரஸ் அரசியல் திவால் நிலையில் உள்ளது. தினேஷுக்கு தன் கட்சியில் உள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். அவர்கள் நிலைக்கு நான் தாழ்ந்து போக மாட்டேன். காங்கிரஸ் கேவலமான அரசியலுக்கான நுழைவாயில். முதலில் அவர்கள் தங்கள் வீட்டை ஒழங்காக வைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்

மேலும், காங்கிரஸின் 200 யூனிட் இலவச மின்சாரம் வாக்குறுதியை குறிப்பிட்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்கு புதியவர் என்பதால் அதே (காங்கிரஸ் இலவச மின்சாரம் வாக்குறுதி) அறிக்கையை அவர் கூறியிருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.காங்கிரஸ் அரசு ஆறு மணி நேரம் தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய தவறியபோது, இலவச மின்சாரத்தை உறுதி செய்ய தவறியபோது, இலவச மின்சாரத்தை எப்படி அந்த கட்சியால் (காங்கிரஸ்) எப்படி கொடுக்க முடியும் என தெரிவித்தார்.