எங்கப்பன் குதிருக்குள் இல்லை... ரஜினி விவகாரத்தில் சூடான பாலகிருஷ்ணன்

 
r

ஆளுநரை விமர்சித்தால்  அவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு அண்ணாமலை வக்காலத்து வாங்குவது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன்.  மேலும், ரஜினியிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியலை பேசியது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்தது.  ஆனால் இது ஐபிஎஸ் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் புரியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுப்ப இருக்கிறார்.

 தமிழக ஆளுநர் ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் அரசியல் பேசினோம் என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னபோது,  என்ன அரசியல் பேசுனீர்கள் என்ற கேள்விக்கு அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தார் ரஜினி.   இது தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

b

 அரசியல் பேசுவதற்கு ஆளுநர் மாளிகை என்ன கட்சி அலுவலகமா?  ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆளுநர் அப்படி என்ன அரசியல் பேசினார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .  இதற்கு அண்ணாமலை கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்.   ரஜினி செய்ததில் என்ன தவறு? பிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும் ? ஆளுநர் மாளிகையில் ஆளுநரிடம் அரசியல் பேசலாமா என்று கேட்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகள்.  திமுக பீ டீமாக திமுக கொடுக்கும் ஆக்ஸிஜனில் உயிர் வாழும் சில தலைவர்கள் தங்கள் இருப்பைக் காட்டுவதற்காக ரஜினியை விமர்சித்துள்ளார்கள்.

 அரசியல் என்றால் ஏன் பிற்போக்குத்தனமாக யோசிக்க வேண்டும்.  ஒரு மனிதனை தப்பாக பேசுவதற்கு தான் அரசியல் என்று நினைக்கிறார்கள்.  ரஜினி அரசியல் பேசினேன் என்று சொன்னது சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை பேசினேன் என்று தான் அர்த்தம் என விளக்கம் கொடுத்தார் .

இதற்கு பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  அதில்,   தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.  அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமை இருக்கிறது.  ஆனால் நாங்கள் அரசியல் பேசினோம் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று சொல்லுகிறார் . பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு பேசிய அரசியல் மர்மம் என்ன?  ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதைத்தான் நாங்கள் கண்டித்து இருந்தோம் . 

a

இந்த கேள்விக்கு ஆளுநரோ ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டும் . ஆனால் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க வேண்டிய அவசியம் இல்லை.   அண்ணாமலை ஆளுநரின் செயலாளரோ,  செய்தி தொடர்பாளரோ  இல்லை.   அப்படி இருக்கும்போது வரிந்து கட்டிக்கொண்டு ஆளுநருக்காக அண்ணாமலை  வக்காலத்து வாங்குவது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது என்கிறார்.

 மேலும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எந்த காலத்திலும் யாருக்கும் பீ டீம்  ஆக இருந்தது கிடையாது .  ஆனால் ஆர்எஸ்எஸ் தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு பி டீம் ஆகவும் ஆட்சிக்கு வந்த பின்னர் கார்ப்பரேட்டுகளின் பீ டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக என்கிறார்.