கெட்ட வார்த்தை - வன்னியரசு மீது 5 பிரிவுகளில் வழக்கு

 
va

வன்னியரசு உள்பட 81 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ஆணையர் நாகராஜ் , ஆய்வாளர் சிவகுமார் ஆகியோரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, பொருளாளர் காஜாமைதீன் உட்பட 81 போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

vr

 கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் அளித்த சேலம் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

 கூட்டம் கூட்டியது,  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி வாகனத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது,  கெட்ட வார்த்தைகளால் போலீசாரை பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

 போலீசாரை கண்டித்துதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.   கடைசியில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.