தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. பா.ஜ.க. ஆட்சியில் குற்றவாளிகள் பயப்படுவதில்லை.. மாயாவதி தாக்கு

 
புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

உத்தர பிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் குற்றவாளிகள் பயப்படுவதில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில்  2 தலித் சகோதரிகள் (வயது 15, 17) கடந்த புதன்கிழமையன்று மரத்தில் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சகோதரிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த சகோதரிகள்  முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்  கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தில் பிணமாக தொங்கிய தலித் சகோதரிகள்

உத்தர பிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கின. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், லக்கிம்பூர் கேரியில் சகோதரிகள் இருவர் படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தினமும் செய்திதாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரம் கொடுப்பதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படவில்லை. 

பிரியங்கா காந்தி

எப்படியிருந்தாலும், உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான  கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன? அரசு எப்போது விழித்துக் கொள்ளும்? என பதிவு செய்து இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கூறுகையில், யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் தவறானவை. தற்போதைய ஆட்சியில் குற்றவாளிகள் பயப்படுவதில்லை என தெரிவித்தார்.