கட்டௌலி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததில் நிறைய சந்தேகம் இருக்கு... பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி

 
தெலங்கானாவை பார்த்து கற்றக்கொள்ளுங்கள்! – டெல்லி, உ.பி போலீசுக்கு மாயாவதி அட்வைஸ்

கட்டௌலி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததில் நிறைய சந்தேகங்கள் உள்ளன என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்தார். 

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 2 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி 2 இடங்களில் (கட்டௌலி சட்டப்பேரவை தொகுதி மற்றும் மெயின்புரி மக்களவை தொகுதி) வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க. ஒரு இடத்தில் (ராம் சதர் சட்டப்பேரவை தொகுதி) மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ராம் சதர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தோற்றதையும், கட்டௌலி தொகுதியில் பா.ஜ.க. தோற்றதையும் குறிப்பிட்டு பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கூட்டு உள்ளது என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாடி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், மெயின்புரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற்றது. ஆனால் திட்டமிட்ட குறைந்த வாக்குகளில்,  அசம் கான் வகித்த சட்டப்பேரவை தொகுதியில் அது (சமாஜ்வாடி) முதல்முறையாக தோல்வியடைந்தது. இது பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையேயான உள்கூட்டு விளைவு அல்லவா?

பா.ஜ.க.

இஸ்லாமிய சமூகம் இதை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும். இதனால் வரவிருக்கும் தேர்தலில் ஏமாற்றப்படாமல் தங்களை காப்பாற்ற முடியும். கட்டௌலி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. மேலும் இது இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயம் என பதிவு செய்துள்ளார்.