பாத யாத்திரை நடத்துவது வன்முறைக்கு வழிவகுக்கும், பேரழிவை ஏற்படுத்தும்.. காங்கிரஸை எச்சரித்த பி.எஸ். எடியூரப்பா

 
4 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! நினைத்ததை சாதித்த பாஜக… 

பாத யாத்திரை நடத்துவது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸை பா.ஜ.க.வின் பி.எஸ். எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

செப்டம்பர் 7ம் தேதி  கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை (இந்தியா இணைப்பு பயணம்)  என்ற பாதயாத்திரை தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த பாதயாத்திரை 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வாயிலாக நடைபெறும். சுமார் 3,500 கி.மீட்டர் தூர இந்த பாதயாத்திரை சுமார் 150 நாட்களில் முடிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ்

இந்த பாதயாத்திரையில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகா வழியாகவும் செல்கிறது. கர்நாடகாவில் 8 மாவட்டங்களை கடந்து பாத யாத்திரை பயணம் செல்ல உள்ளது. இந்நிலையில், பாதயாத்திரையால் பேரழிவு ஏற்படும் என்று பா.ஜ.க.வின் பி.எஸ்.எடியூரப்பா எச்சரிக்கை செய்துள்ளார்.

சித்தராமையா


பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்துவது வன்முறைக்கு வழிவகுக்கும். போராட்டத்தை காரணம் காட்டி, பாதயாத்திரை நடத்துவது தேவையற்றது. காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நிதானத் கடைபிடிக்க வேண்டும். முன்மொழியப்பட்ட பாதயாத்திரை நடத்தப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள், அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சினைக்கு சித்தராமையா மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.