2016ம் ஆண்டு முதல் பெகாசஸ் உளவு சாப்ட்வேரை பயன்படுத்தும் மம்தா பானர்ஜி... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2016ம் ஆண்டு முதல் பெகாசஸ் சாப்ட்வேரை பயன்படுத்தி வருகிறார் என்று பா.ஜ.க.வின் அனிர்பன் கங்குலி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிர்பன் கங்குலி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ.க.வை விட்டு சுவேந்து அதிகாரி வெளியேற விரும்புகிறார் என்பது குணால் கோஷ்க்கு எப்படி தெரிந்தது? சுவேந்து ஆதிகாரியின் போனை குணால் கோஷ் ஒட்டு கேட்டாரா? திரிணாமுல் காங்கிரஸ் போன்களை ஒட்டு கேட்க பெகாசஸ் (உளவு சாப்ட்வேர்) பயன்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன். 

அனிர்பன் கங்குலி

2016ம் ஆண்டு முதல் மம்தா பானர்ஜி பெகாசஸ் உளவு சாப்ட்வேரை பயன்படுத்துகிறார். மம்தா போன்களை ஒட்டு கேட்டால், பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை அவர் ஏன் பகிரங்கப்படுத்தவில்லை? அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. திரிணாமுல் காங்கிரஸின் உள் உறவுகளும், கட்சியில் நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது, ஒழுங்கின்மை உச்சத்தை எட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இரு அணிகளாக அமர்ந்துள்ளது. குணால் கோஷ் அபிஷேக் பானர்ஜி அணியிலும், கல்யாண் பானர்ஜி, மம்தா பானர்ஜி அணியில் கல்யாண் பானர்ஜியும் உள்ளனர். 

பெகாசஸ் சாப்ட்வேர் விவகாரம்

திரிணாமுல் காங்கிரஸ் தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது. குணால் கோஷூம் அவரது அறிக்கைகளும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் யாரும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை என்பது மக்களுக்கு தெரியும். மம்தா பானர்ஜியின் உத்தரவை யாரமு் பின்பற்றுவதில்லை. அவரது சொந்த கட்சியில், அபிஷேக் பானர்ஜியே அரசியலை கைவிட்டு ஓய்வு பெற விரும்பினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.