அசோக் கெலாட் கிளர்ச்சியின் பாதையில் செல்கிறார்... காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தும் அமித் மால்வியா

 
அசோக் கெலாட்

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை பாராட்டியதை குறிப்பிட்டு, அசோக் கெலாட் கிளர்ச்சியின் பாதையில் செல்கிறார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளார் பா.ஜ.க.வின் அமித் மால்வியா.


பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், ராஜஸ்தானின் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தையும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சில முடிவுகளையும் பாராட்டிய பேசிய வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.  மேலும் அந்த டிவிட்டில், தவறு செய்யாதீர்கள். அசோக் கெலாட் கிளர்ச்சியின் பாதையில் செல்கிறார். 

பிரகலாத் ஜோஷி

கவுதம் அதானியை அழைத்த பிறகு, ராகுல் காந்தியின் ஏளனத்தை மீறி, அவர் (அசோக் கெலாட்) இப்போது ராஜஸ்தானுக்கு நெருக்கடியான நேரத்தில்  உதவியதற்காக கோல் இந்தியா மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் மீது முழு பாராட்டுகளை குவித்துள்ளார். இது காங்கிரஸின் போர்க்குணத்திற்கு எதிரானது என பதிவு செய்துள்ளார்.

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அசோக் கெலாட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இதனை விரும்பவில்லை. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என்று அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமைக்கு மிரட்டல் விடுத்தனர். இது காங்கிரஸ் தலைமைக்கு  அசோக் கெலாட் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அசோக் கெலாட் தெரிவித்தார். மேலும், ராஜஸ்தானின் நெருக்கடிக்கு சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.