இடதுசாரிகள், காங்கிரஸின் தந்திரமான அரசியலை திரிபுரா மக்கள் நன்கு அறிவார்கள்... பா.ஜ.க. தலைவர்

 
 ரஜீப் பட்டாச்சார்ஜி

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தந்திரமான அரசியலை மாநில மக்கள் நன்கு அறிவார்கள் என்று திரிபுரா பா.ஜ.க. தலைவர் ரஜீப் பட்டாச்சார்ஜி தெரிவித்தார்.

திரிபுரா பா.ஜ.க. தலைவர் ரஜீப் பட்டாச்சார்ஜி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: 1972ல் திரிபுரா மாநிலம் ஆனதில் இருந்து காங்கிரஸ் மற்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய  இரு கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினாலும், 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 36 இடங்களை வென்று பா.ஜ.க. மாநிலத்தின் அரசியல் எண்கணிதத்தை மாற்றியது. இதனால் காங்கிரஸ் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தந்திரமான அரசியலை மாநில மக்கள் நன்கு அறிவார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்

மதச்சார்பற்ற சக்திகளுக்கு இடையே கூட்டணிக்காக வாதிடும் இரு கட்சிகளுக்கு இடையேயான அரசியல் கூட்டணி மாநிலத்தில் புதிதல்ல. அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திப்ர மோதா ஆகிய கட்சிகளின் தேர்தல் தந்திரங்கள் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 2023 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்.

பா.ஜ.க.

பா.ஜ.க.வுக்கு பயங்கரவாத தந்திரங்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பிரச்சினையை உருவாக்க முயற்சிப்பவர்களை சும்மா விடாது. இடதுசாரி ஆட்சியின் போது நடந்த இடது முன்னணி அமைச்சர் பிமல் சின்ஹா மற்றும் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சுக்ராம் டெபர்மா ஆகியோரின் கொலைகளை எதிர்க்கட்சிகள் மறந்து விட்டன. அவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.