பூதாகரமாக வெடித்த நபிகள் பற்றிய பேச்சு - பாஜக செய்தி தொடர்பாளர்கள் அதிரடி நீக்கம்

 
nu

முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா , நவீன்குமார் ஜிந்தால் பேசிய கருத்துக்கள் சர்ச்சையானதை அடுத்து  நூபுர் சர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து இருக்கிறது  பாஜக தலைமை.   நவீன் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருக்கிறது.

 டிவி விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நூபுர் சர்மா,   முகமது நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.   இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் பூதாகரமாக வெடித்திருக்கிறது.   வளைகுடா நாடுகளில் இந்திய பொருள்களை புறக்கணிப்போம் என சமூக வலைத்தளத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

ns

 டெல்லி பாஜக ஊடக பிரிவைச் சேர்ந்த நவீன்குமார் ஜிந்தாலும் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார் .  இதனால் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.  விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

 பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது.  எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.   அதே நேரம் நூபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்க இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.  நவீன் குமார் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறது பாஜக மேலிடம் .

நூபுர் சர்மா மீது மகாராஷ்டிரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் திடீர் கடையடைப்புக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.  இந்த விவகாரம் இரு மதத்தினர் இடையே வன்முறையாக மாறி இருப்பதால் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என 800க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .  

விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பாஜக தலைமை  சம்பந்தப்பட்ட இருவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.