ரிமோட் கண்ட்ரோல் தலைவர் அல்லது ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்?.. கார்கேவை எப்படி அழைக்க வேண்டும்?.. பா.ஜ.க. கிண்டல்

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என்று சல்மான் குர்ஷித் என்று தெரிவித்ததை குறிப்பிட்டு, அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை ரிமோட் கண்ட்ரோல் தலைவர் என்றா அல்லது ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்றா எப்படி அழைக்க வேண்டும் என்று பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் நேற்று பேட்டி ஒன்றில் கூறுகையில், எங்களிடம் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால் முக்கிய தலைவர்கள் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள். மல்லிகார்ஜூன் கார்கே ஜி எங்கள் தேசிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதில் மல்லிகார்ஜூன் கார்கே முக்கிய பங்கு வகிக்கிறார் என்று தெரிவித்தார். 

முதல்வர் வேட்பாளரா, இல்லையா என்பதே பிரியங்கா காந்தியே முடிவு செய்வார்.. சல்மான் குர்ஷித் தகவல்

கடந்த அக்டோபர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காங்கிரஸின் தலைவராக கார்கே இருந்தாலும், அவரால் முடிவுகளை சுயமாக எடுக்க முடியாது என்று பா.ஜ.க. விமர்சனம் செய்து இருந்தது.  தற்போது கட்சியின் முக்கிய தலைவர்கள் காந்தி குடும்பத்தை சோந்தவர்கள்தான் என்று சல்மான் குர்ஷித் பேசியது பா.ஜ.க.வுக்கு காங்கிரஸை விமர்சனம் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. இந்த வாய்ப்பை பா.ஜ.க.வும் விட்டுவிடவில்லை.

கவுரவ் பாட்டியா

பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், உண்மை வெளிப்படுகிறது. காங்கிரஸூக்கு முகக்துதி மற்றும் வாரிசு அரசியலின் மீது நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தலைவராக யார் வந்தாலும், சல்மான் குர்ஷித் கூறியது போல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் கட்டளை இருக்கும். மல்லிகார்ஜூன் கார்கேவை ரிமோட் கண்ட்ரோல் தலைவர் அல்லது ரப்பர் ஸ்டாம்ப்  தலைவர் என்று அழைக்க வேண்டுமா? என தெரிவித்தார்.