"அவருக்கே லெட்டரா?.. சமூகநீதிக்கே துரோகம் " - முரசொலியை சுட்டிக்காட்டி முதல்வரை விமர்சித்த பாஜக!

 
ஸ்டாலின்

மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை போராடி பெற்றதற்காக பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தின. அந்த விழா குடியரசு தினத்தன்று ஜனவரி 26ஆம் தேதி காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. அப்போது பேசிய 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாடு முழுவதும் சமூகநிதிக் கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும்” என அறிவித்தார். 

மின்கட்டணத்தை ரத்து செய்க- ஸ்டாலின் வலியுறுத்தல் | nakkheeran

மேலும் இதில் இணையுமாறு அகில இந்திய அளவில் 37 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு கடிதம் ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பினார். ஆனால் இந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சூழலில் இந்தக் கூட்டமைப்பு விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. 

எம்பி ஜோதிமணி விஷம பேச்சு..! பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நச்  பதிலடி..! - Madras Telegram

அதில், "சமூக நீதியை நிலைநாட்ட, மேம்படுத்த, நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடு மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும் என்று சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மண்டல் ஆணையத்திற்கு எதிராக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு, இந்த நாட்டையே பிளந்து சுடுகாடாக்கிட துடித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சமூக நீதி கூட்டமைப்புக்காக கடிதம் எழுதியுள்ளீர்களே.


இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு திமுக இழைக்கும் அநீதி இல்லையா ஸ்டாலின் அவர்களே? நீங்கள் கடிதம் எழுதியுள்ள 37 தலைவர்களில் பெரும்பான்மையானோர் முன்னர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்தான். அவர்களை கூட்டமைப்புக்கு அழைப்பது சமூக நீதிக்கு நீங்கள் இழைக்கும் துரோகம் என்று உணரவில்லையா ஸ்டாலின் அவர்களே? இனியாவது சமூக நீதி என்ற பெயரில் செய்து வந்த, செய்து கொண்டிருக்கிற மலிவு அரசியலை கைவிட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படுவீர்களா?


உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறையிருந்தால் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை மக்களிடம் தெரிவிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மண்டல் கமிஷனின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த விடாமல் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவையெல்லாம் முரசொலியில் 1990ஆம் ஆண்டு பிரசுரமானது என்று பதிவிட்டுள்ள அவர், "நான் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டதாக உங்களால் குற்றம் சாட்ட முடியுமா திரு.ஸ்டாலின் அவர்களே?" என கேள்வியெழுப்பியுள்ளார்.