மொழிப்போர் - அக்கப்போர்
கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கு பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது. இல்லாத ஹிந்தி திணிப்பை புகுத்தி இன்னொரு அக்கப்போரைத் திணிக்காதீர் என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கு, இல்லாத ஹிந்தி திணிப்பை புகுத்தி இன்னொரு அக்கப்போரைத் திணிக்காதீர் என்கிறார் நாராயணன் திருப்பதி.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் பாஜக , எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர். தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை பற்றி அவதூறு செய்து அரசியல் நடத்துகிறது பாஜக. மதத்தை, ஆன்மீக உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்த பார்க்கிறது. அரசியலையும் ஆன்மீகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ் மக்கள் என்பதால் மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது பாஜக என்று முதல்வர் சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
இதற்கு நாராயணன் திருப்பதி, எந்த மொழியில் திமுக பேசுகிறதோ அதே மொழியில் பாஜக பேசவேண்டியது கட்டாயம். பாஜகவின் மக்கள் நல மற்றும் கட்டமைப்பு திட்டங்களினால் தான் தமிழக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை. ரம்ஜானுக்கும், கிறுஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, ஹிந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் ஹிந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்.