ஓபிஎஸ் உடம்பில் கைகளே இருக்காது..அண்ணாமலைக்கு கைகள் இருக்காது.. மாஜி மிரட்டலுக்கு பாஜக கொடுத்த பதிலடி

 
an

 அண்ணாமலை பொறுக்கி, அண்ணாமலையே இல்லாமல் ஒழித்து விடுவேன் , உள்ளே தள்ளி கவனித்தால் அப்புறம் அடங்கி விடுவார் .  எங்கள் நிலையில் உள்ளவர்கள் இப்படி பேசுகிறோம்.   கீழ்நிலையில் உள்ள நிர்வாகிகளுக்கு சொல்லிவிட்டோம் என்றால் அவர்கள் மிகவும் மோசமாக பேசுவார்கள் என்று அமைச்சர் அன்பரசன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக  எச்சரித்திருந்தார்.  

ஒப்

 திமுகவின் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்னிடம் இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்த அண்ணாமலை,  ஒரு ஊழல் பட்டியலை வெளியிட்டார். இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு எழுந்திருக்கிறது.   இதனால் அண்ணாமலையின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.   அமைச்சர் அன்பரசனுக்குப் பிறகு திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் குன்றத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அன்

 திமுக வுக்கு எதிராக பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைகள் இருக்காது என்று மிரட்டல் விடுத்தார்.   இதையடுத்து செயலாளர் தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பதிலடி கொடுத்திருக்கிறார்.    கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது பாஜகவுக்கும் தெரியும் என்று சொல்லி இருக்கிறார்.   அவர் மேலும்,  உங்களின் அராஜகம் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது என்கிற கோபத்தில் அண்ணாமலை மீது திமுகவினர் காட்டமாக இருக்கின்றார்கள்.  அதனால்தான் மேடைகளிலும் அண்ணாமலையை  மிரட்டுகின்றார்கள்.  

அமைச்சர் அன்பரசன் பொறுக்கி என்றும்,  இல்லாமல் ஒழித்து விடுவேன் என்று பேசுகிறார். அவரே இப்படிப் பேசும்போது அவருக்கு கீழ்நிலையில் இருப்போர்  கொஞ்சம் கூடுதலாக தானே பேசுவார்கள் ?  அந்த வகையில்தான் முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் தன் பங்கிற்கு அண்ணாமலையின் கரங்கள் இருக்காது என்று பேசினார்.   அண்ணாமலையின் குடும்பத்தினரைப் பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார் கலைராஜன்.

வ்ப்

 ஆனால் இந்த சலசலப்புகள் மிரட்டல்களுக்கு எல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வித்தியாசத்தையும் திடமான முடிவுகளை தர காத்திருக்கிறது பாஜக.   இப்போது திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது .  அதற்காக இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பதிலடி கொடுக்க பாஜகவும் தயார்.  பாஜகவுக்கும் கண்ணுக்குக் கண்,  பல்லுக்குப் பல் என்பது எல்லாம் தெரியும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

 அவர் மேலும்,   இந்தியாவையே ஆளுகின்ற பக்குவம் உடைய கட்சியாக பாஜக இருப்பதால் நாகரீகம் கருதி நாவையும் புஜங்களையும் கரங்களையும் அடக்கி வைத்திருக்கிறது என்பதை திமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.   இல்லையென்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

அச்

கடந்த 2017 ஆம் ஆண்டில் சசிகலா அணி,  ஓ.பன்னீர் செல்வம் அணி என்று இரண்டு அணியாக அதிமுக பிரிந்து இருந்த போது,  அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் பன்னீர்செல்வத்தின் கைகளை வெட்டுவேன். ஓபிஎஸ் உடம்பில் கைகளே இருக்காது என்று அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் எச்சரித்திருந்தார்.  தற்போது திமுகவில் இருக்கும் கலைராஜன் பாஜக அண்ணாமலைக்கு அதே மிரட்டலை விடுத்துள்ளார்.