காங்கிரஸ் வாக்குகளுக்காக இந்து மத உணர்வுகளை புண்படுத்துகிறது.. சுதன்ஷு திரிவேதி குற்றச்சாட்டு

 
காங்கிரஸ்

காங்கிரஸ் வாக்குகளுக்காக இந்து மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று பா.ஜ.க.வின் சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக காங்கிரஸின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்து வார்த்தை பெர்சியாவில் இருந்தது. இந்து என்றால் வார்த்தையின் பொருளை புரிந்து கொண்டால், நீங்கள் வெட்கப்படுவீர்கள். இந்து என்ற வார்த்தையின் அர்த்தம், மிகவும் அழுக்கு. நான் இதை சொல்லவில்லை. சுவாமிஜி இதை சொல்லியிருக்கிறார் என்று பேசியிருந்தார். இது  பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வாக்குகளுக்காக இந்து மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

சதீஷ் ஜார்கிஹோலி

பா.ஜ.க.வின் சுதன்ஷு திரிவேதி நேற்று செய்தியாளாகள் சந்திப்பின்போது கூறியதாவது: இந்து மதம் என்றால்  என்ன என்பதை தத்துவவாதிகள் ஆர்தர் ஸ்கோபன்ஹவர், வெர்னர் ஹைசன்பெர்க் ஆகியோரிடம் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திர திருநாளில் (சுதந்திரத்தின் 75வது ஆண்டுகள்) இவ்வளவு விஷம் நிரம்பியிருப்பது வருத்தமளிக்கிறது. மதச்சார்பற்ற அரசியலை ஊக்குவிப்பவர்கள், அவர்கள் பழமையானவர்களாக இருந்தாலும் சரி, புதியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் இயல்பு மாறவில்லை. 

சுதன்ஷு திரிவேதி

இந்து மதத்தின் மீதான வெறுப்பையும் அவமரியாதையும் வெளிப்படுத்துவதே மதச்சார்பின்மை என்பதன் அர்த்தகம். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது மக்கள் காதில் ராகுல் ஜி என்ன மந்திரம் சொல்கிறார். நீங்கள் வாக்குகளை சேர்க்க இந்து மத உணர்வுகளையும் அடையாளத்தையும் புண்படுத்த விரும்பினால், பின்வாங்க வேண்டாம். இந்துக்கள் என்றால் பயங்கரவாதிகள் என்றும், இந்துக்கள் என்றால் தலிபானிகள் என்றும் இந்துக்கள் என்றால் போகோஹராம் என்றும் ஒரு காலத்தில் மக்கள் பேசி வந்தனர். இந்த சாதனைகள் இந்திய அரசியலில் மிகப் பழமையான கட்சிக்கு (காங்கிரஸ்) சொந்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.