ஓசி சோறுக்கே இவ்வளவு நாக்கொழுப்பா? கி.வீரமணி மீது பாஜக பாய்ச்சல்

 
v

ராமர் பாலம் கட்டியிருந்தால் அனுமார் அதில் நடந்து இலங்கைக்கு சென்றிருக்கலாமே.  அவர் ஏன் இலங்கைக்கு பறந்து செல்ல வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி இருந்த கி. வீரமணிக்கு,   ஓசி சோறுக்கே இவ்வளவு நாக்கொழுப்பா  என்று பாஜக ஆவேச  பாய்ச்சலை காட்டி இருக்கிறது.

r

சூரிய கிரகணத்தின் போது யாரும் சாப்பிடக்கூடாது; கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற வழக்கம் இருந்து வருகிறது . இது மூடநம்பிக்கை என்றும் இந்த மூடநம்பிக்கையை உடைக்கும் விதத்திலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் விருந்து பரிமாறப்பட்டு வருகிறது. 

நேற்று சூரிய கிரகணத்தின் போது இதே மாதிரி திராவிடர் கழகத்தின் சார்பில் டிபன் சாப்பிடும் நிகழ்வு நடந்தது.  இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்று பேசினார்.   அப்போது அவர் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சிற்றுண்டி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.   ஆனாலும் சாப்பிடுவதற்கான காரணம் எங்களின் கொள்கையை வலியுறுத்துவதற்காகத் தான்.   மூடநம்பிக்கைகளை உடைப்பதற்கு எல்லா நடவடிக்கையும் எடுப்போம் என்றார்.

h

மேலும்,  இப்படி செய்வதே சுயமரியாதை வாழ்வு,  சுகவாழ்வு என்பதற்கு பொருளாக மக்களுக்கு காட்டுகிறோம் என்றார்.

 அவர் மேலும் பேசிய போது,   இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே ராமர் பாலம் கட்டியிருந்தால் அதை யாராலும் உடைத்திருக்க முடியாது.  அது மட்டும் இல்லாமல் ராமர் பாலத்தை கட்டி இருந்தால் அனுமன் பாலம் வழியாக இலங்கைக்கு சென்றிருக்கலாமே,  அவர் ஏன் இலங்கைக்கு பறந்து  சென்றார்? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வீரமணி மீது ஆவேச பாய்ச்சலை காட்டியிருக்கிறார். அவர், ஈ.வெ.ரா அவர்கள் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும், ஆயிரம் வசதி, வாய்ப்புகள் இருந்தும், இன்னும் திமுகவிலும், அதிமுகவிலும் வீரமணி ஏன் 'ஓசி சோறு' திண்ண வேண்டும் என்று நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்ட தயா அழகிரிக்கு முதலில் பதில் சொல்லி விட்டு கேள்விகளை கேளுங்கள்.  'ஓசி சோறுக்கே' இவ்வளவு நாக்கொழுப்பா? என்கிறார்.