ராகுல் காந்தி பார்ட் டைம் அரசியல்வாதி கூட இல்லை, பார்ட்டி நேர அரசியல்வாதி... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவில் உள்ள காட்சி

ராகுல் காந்தி பார்ட் டைம் அரசியல்வாதி கூட இல்லை, பார்ட்டி நேர அரசியல்வாதி என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய சுற்றுபயணத்தையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

ராகுல் காந்தி

வெளிநாட்டில் ராகுல் காந்தி ஒரு பார்ட்டியில் (நைட் கிளப்) கலந்து கொண்ட வீடியோவை பா.ஜ.க. தலைவர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவரை கடுமையாக தாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டது தெரிகிறது. நேபாளத்தின் தலைநகர் காத்தமண்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க.
பா.ஜ.க.வின் ஷெசாத் பூனவல்லா டிவிட்டரில், ராஜஸ்தான் எரிகிறது ஆனால் ராகுல் காந்தி தனது சொந்த கட்சியை விட பார்ட்டியை விரும்புகிறார். அவர்  இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளை பற்றி ட்விட் செய்கிறார் ஆனால் பாரத் கே லாக்கை விட மதுக்கடைகளை விரும்புகிறார். ராகுல் காந்தி பார்ட் டைம் அரசியல்வாதி கூட இல்லை, பார்ட்டி நேர அரசியல்வாதி. இது முதல் முறையல்ல. 26\11 தாக்குதலுக்கு பிறகும் அவர் பார்ட்டி மனநிலையில் இருந்ததை நினைவில் கொள்ளுங்க என பதிவு செய்து இருந்தார்.