ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் நக்சல்கள்.. பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை

 
பாதயாத்திரையால் கால்களில் கொப்புளம் -  நாளை ஓய்வெடுக்கிறார் ராகுல் காந்தி..

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சில முன்னாள் நக்சலைட்டுகள் மற்றும் அவர்களின் நலம் விரும்பிகள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் பங்கு பெற்றதற்கான சில தடங்கள் என்னிடம் உள்ளன என பா.ஜ.க. எம்.பி. லெஹர் சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த மாதம் தொடங்கினார். தற்போது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கர்நாடகாவில் நடந்து வருகிறது.  இந்நிலையில், காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சில முன்னாள் நக்சலைட்டுகள் மற்றும் அவர்களின் நலம் விரும்பிகள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் பங்கு பெற்றதற்கான சில தடங்கள் என்னிடம் உள்ளன என பா.ஜ.க. எம்.பி. லெஹர் சிங் தெரிவித்தார்.

லெஹர் சிங்

மேலும், நக்சல் பிரிவினரும் நடைப்பயணத்துக்கு ஆதரவளிக்கிறார்களா என்றும் ஹெஹர் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. லெஹர் சிங்கின் கருத்துக்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அத்தகையை சக்திகளுக்கு (நக்சல்கள்) எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா காந்தி பங்கேற்ற உள்ளார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் கடந்த 3 நாட்களாக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இது ஒரு வரலாற்று யாத்திரை என்பதை காட்டுகிறது மற்றும் மக்கள் அதில் சேர விரும்புகிறார்கள்.  காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வரும் அக்டோபர் 6ம் தேதி (வியாழக்கிழமை) மண்டியாவில் நடைபெறும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார்.