தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுங்க.. லாலு பிரசாத் யாதவுக்கு சவால் விடுத்த கிரிராஜ் சிங்

 
எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

பீகாரில் உங்கள் ஆட்சிதான் நடக்கிறது, தைரியம் இருந்தால் அங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுங்க என்று லாலு பிரசாத் யாதவுக்கு பா.ஜ.க.வின் கிரிராஜ் சிங் சவால் விடுத்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967ன்கீழ்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்ததோடு, அந்த அமைப்புகள் செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. இதனையடுத்து இந்து தீவிரவாதம் பற்றி பேசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று மூத்த அரசியல்வாதியான லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.

நிதிஷ் அரசை கவிழ்க்க தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய லாலு… சுஷில் குமார் பகீர் தகவல்
பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனமான லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பி.எஃப்.ஐ. மீதான தடையை தொடர்ந்து, நாட்டில் வகுப்புவாத வெறுப்பை ஏற்படுத்த காரணமான ஆர்.எஸ்.எஸ். உளட்பட ஒவ்வொரு அமைப்பும் தடை செய்யப்பட வேண்டும். அவர்கள் பி.எஃப்.ஐ.-ன் போகத்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இந்து தீவிரவாதம் பற்றி பேசும் ஆர்.எஸ்.எஸ்.தான் முதலில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். லாலுவின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

கிரிராஜ் சிங்

பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் சிங் டிவிட்டரில்,  நாங்கள் எங்களை பெருமைமிக்க ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்று கூறலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களை பி.எஃப்.ஐ. உறுப்பினர்கள் என்று சொல்ல முடியுமா?. பீகாரில் அவர்களுக்கு ஆட்சி இருக்கிறது. அவர்களுக்கு தைரியம் இரு்நதால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யட்டும் என பதிவு செய்து இருந்தார்.