நவாப் மாலிக் கைது சட்டப்படி நடந்தது.. தேச விரோதி தாவூத்துக்கு எதிராக ஒன்றுபடுங்கள்... தேவேந்திர பட்னாவிஸ்

 
வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை சட்டப்படிதான் கைது செய்தது என பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது சகோதரி ஹசீனா மற்றும் தாவூத்தின் கூட்டாகளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தததில் மகாராஷ்டிரா சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை கடந்த புதன்கிழமையன்று அமலாக்கத்துறை கைது செய்தது. மாலிக் கைது செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். 

தாவூத் இப்ராஹிம்

இந்நிலையில், நவாப் மாலிக் கைது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் இது தொடர்பாக கூறியதாவது: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து ஒருவர் நிலம் வாங்குவதற்கான காரணம் என்ன? ஹசீனா பார்கருடன் (தாவூத்தின் சகோதரி) பரிவர்த்தனை செய்ய காரணம் என்ன? இந்த பரிவர்த்தனைக்கு பிறகு, மும்பையில் மூன்று தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.  மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் டீலிங் வைத்ததும், அவர்களுக்கு பணம் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது. நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டப்படி நடந்தது. இந்த விஷயத்தில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் கோணம் மிகவும் தெளிவாக உள்ளது. 

பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் செய்ததை மகாராஷ்டிராவில் ரானே மூலம் செய்ய முயற்சி செய்கிறது.. நவாப் மாலிக் குற்றச்சாட்டு

நாட்டின் நம்பர் ஒன் எதிரியான தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது சகோதரி ஹசீனா பார்க்கருடன் நடந்த பரிவர்த்தனையை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும். இது மிகவும் தீவிரமான விஷயம். தாவூத் இப்ராஹிம் மற்றும் ஹசீனா பார்க்கர் ஆகியோருக்கு பயங்கரவாத நிதியளிப்பு கோணம் இருந்தால் எந்த அரசியல் கட்சியும் இது போன்ற செயலை கண்டிக்க வேண்டும். இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், ஆனால் தேச விரோதி தாவூத்துக்கு எதிராக ஒன்றுபடுங்கள். இது ஒரு தீவிரமான விஷயம் என்றும், மாலிக்கின் ராஜினாமாவை நாங்கள் கோர வேண்டிய அவசியமில்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். அவரே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக அம்பலப்படுத்துவோம். பா.ஜ.க. மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இந்த விவகாரத்தில் தனது கருத்தை விரைவில் வெளிப்படுத்துவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.