மாநில தேர்தல் ஆணையர் சவுரப் தாஸ் திரிணாமுல் காங்கிரஸின் அடிமை... பா.ஜ.க.வின் அனிர்பன் கங்குலி சாடல்

 
திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க தேர்தல் ஆணையர் சவுரப் தாஸ் திரிணாமுல் காங்கிரஸின் அடிமையாக செயல்படுகிறார் என பா.ஜ.க.வின் அனிர்பன் கங்குலி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அனிர்பன் கங்குலி கூறியதாவது: மாநில தேர்தல் ஆணையர் சவுரப் தாஸ் திரிணாமுல் காங்கிரஸின் அடிமை. அவருக்கு சொந்த இருப்பு இல்லை. உச்ச நீதிமன்றமும், கொல்கத்தா உயர் நீதிமன்றமும் சுயபரிசோதனை (குற்றம் சாட்டப்படும் வன்முறை) செய்ய வேண்டும், ஏனென்றால் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்பக் கோரி நாங்கள் மனு தாக்கல் செய்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

அனிர்பன் கங்குலி

மாநில அரசாங்கத்தின் கட்டை விரலின்கீழ் செயல்படுவதால், மாநில தேர்தல் ஆணையம் (சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தாது) என்பதை அவர்கள் (நீதிமன்றங்கள்) அறிந்திருந்தனர், ஆனால் அவர்கள் மனுவை தள்ளுபடி செய்தனர். பெண்கள் அதிகாரம் பற்றி அடிக்கடி பேசும் ஒரு பெண்ணாக இருந்தாலும் பொதுஇடங்களில் குண்டர்களை கட்டவிழ்த்து விட்டார்.

மம்தா பானர்ஜி

அவர் (மம்தா பானர்ஜி) பயத்தை தூண்டி வாக்குகளை பெறுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது. இது தெளிவாக கொள்ளையடிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அனுதாபிகள் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 108 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்.