பாஜக காரணமில்லை; திமுகதான் காரணம் - அடித்துச்சொல்லும் சசிகலா

 
sas

 அதிமுகவில் இருந்து ஏற்கனவே சசிகலா வெளியேற்றப்பட்டு அவர் மீண்டும் அதிமுகவிற்குள் வர முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒற்றுமையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் இருவரும்  இது வேறு திசையில் நிற்கிறார்கள்.   அதிமுகவில் இந்த அளவிற்கு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.   அதற்கு காரணம் திமுக தான்  என்கிறார் சசிகலா.

ep

 அதிமுகவின் முதல் எம். பி,  அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று தந்த வரும்,  முதல் வெற்றியை தந்தவருமான மாயத்தேவர் காலமானதை அடுத்து அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.   சசிகலாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது,   ’’அதிமுகவின் மோதல் குறித்த கேள்விக்கு,    ’’அதிமுக தனிப்பட்ட நபருக்கான கட்சி அல்ல.  பொறுத்திருந்து பாருங்கள் அனைவரையும் ஒன்றிணைப்பேன்.   அதிமுகவை கைப்பற்றுவதுடன்  இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்றார் உறுதியாக .

பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவுக்கு காரணமா என்று கேள்விக்கு ,   40 வருடங்களாக அதிமுகவிலிருந்து இருக்கிறேன் எல்லா அரசியல் சூழ்நிலைகளையும் பார்த்து இருக்கிறேன்.   அதிமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக நினைக்கிறேன் .  அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம்.   திமுக தான் பின்னால் இருந்து செயல்படுகிறது .  மற்றபடி அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசு காரணம் இல்லை என்று அழுத்தமாகச் சொன்னார்.