தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல பாஜக! இதுதான் உண்மையான நிலவரம்
தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல பாஜக என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று விமர்சித்திருக்கிறது முரசொலி . மோடியின் பிம்பம் என்ற சாயும் வெளுத்துக் கொண்டிருக்கிறது என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.
குஜராத், இமாச்சலப் பிரதேசத்திற்கு அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது பாஜக . ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் எழுதப்பட்டிருக்கும் தலையங்க கட்டுரையில், ஒரே மாதிரியான வெற்றியை இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு வழங்கவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது. சமாஜ்வாடி வெற்றி பெற்றிருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் கதாலி. ராம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் கதாலியில் பாஜக தோற்றுவிட்டது. ராஷ்டிரிய லோக் தளம் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராம்கூரில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. இதுதான் உபியில் உண்மையான நிலவரம் .
ராஜஸ்தானில் சர்தார் சாகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை கண்டு இருக்கிறது. காங்கிரஸ் அங்கே வென்று இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பானு பிரதாப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் அங்கே வென்றிருக்கிறது . ஒடிசாவில் பதம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வி கண்டிருக்கிறது. பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. பீகாரில் குக்கானி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
நடந்து முடிந்த ஒரே ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியையும் 6 சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. இந்த முடிவுகள் குறித்து பாஜகவினர் பேசுவதே இல்லை . இவை அனைத்துக்கும் மேலாக டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
தோற்கடிக்க முடியாத தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல பாஜக என்பது இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மோடியின் பிம்பம் என்ற சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறது என்பது இவை காட்டுகின்றன. மக்கள் மனதை பிரச்சாரங்களின் மூலமாக மாற்ற முடியும் என்பதையே இவை காட்டுகின்றன. மொத்தத்தில் காலம் மாறும் என்பதையே காட்டுகின்றன.