மாநிலத்தை கடன் வலையில் சிக்கி கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க முயல்கிறது.. பினராயி விஜயன் அரசை தாக்கிய ஜே.பி. நட்டா

 
ஜே.பி.நட்டா

கேரளாவை கடன் வலையில் சிக்கி கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க முயல்கிறது என்று பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசை பா.ஜ.க. ஜே.பி. நட்டா தாக்கினார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று கேரளா சென்றார். கேரளாவில் பல முக்கிய கட்சி கூட்டங்களில் பங்கேற்பதுடன், புதிய கட்சி அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார். கேரளாவில் நேற்று  ஜே.பி. பேசுகையில் கூறியதாவது: கேரளாவில் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு, மாநில அரசை கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க முயல்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கேரள அரசின் கடன் இப்போது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. முதல்வர் அலுவலகம் கூட ஊழலில் இருந்து விடுபடவில்லை. தங்க மோசடியின் சூடு கூட முதல்வர் அலுவலகத்தை எட்டியுள்ளது. மாநிலத்தில் சட்டவிரோதம் உள்ளது. விளிம்புநிலைகள் அதிகரித்து வருகின்றன. எங்கள் தொண்டர்கள் படுகொலை  செய்யப்பட்டனர். இதையெல்லாம் மீறி இரவும் பகலும் உழைத்து முன்னேறி வரும் எனது தொண்டர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் கூட்டம் ஒன்றில் பேசுகையில், பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத்துடன் இணைத்து சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரராக சேர்க்க பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸூம் இப்போது முயற்சி செய்கின்றன. ஆங்கிலேயர்களுடன் போராட வேண்டிய அவசியமில்லை என்று இந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது. ஆர்.எஸ்.எஸ். சுதந்திர போராட்டத்தில் ஒரு போதும் அங்கம் வகிக்கவில்லை, அவர்கள் எப்படியாவது கைது செய்யப்பட்டாலும், சாவர்க்கரின் உதாரணம் நமக்கு தெரியும் என்று பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.