நாட்டில் 3 முஸ்லிம், ஒரு சீக்கிய குடியரசு தலைவர், பத்து ஆண்டுகளாக ஒரு சீக்கிய பிரதமர் இருந்துள்ளனர்.. பா.ஜ.க. பதிலடி

 
பா.ஜ.க.

நம் நாட்டில் 3 முஸ்லிம் மற்றும் ஒரு சீக்கிய குடியரசு தலைவர், பத்து ஆண்டுகளாக ஒரு சீக்கிய பிரதமராக இருந்துள்ளனர்,  இந்தியா வேறு எந்த நாட்டிலிருந்தும்  பன்முகத்தன்மை பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என முப்திக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை குறிப்பிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை மெகபூபா முப்தி தாக்கினார். நேற்று முன்தினம் இரவு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி டிவிட்டரில், இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக பதவியேற்க இருப்பது பெருமைக்குரிய தருணம். 

பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

இந்தியா முழுவதும் சரியாகக் கொண்டாடும் அதேவேளையில், பிரிட்டன் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொண்டாலும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் போன்ற பிரிவினை மற்றும் பாரபட்சமான சட்டங்களால் நாம் இன்னும் கட்டப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வது நல்லது. என பதிவு செய்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், 3 முஸ்லிம் மற்றும் ஒரு சீக்கிய குடியரசு தலைவர், பத்து ஆண்டுகளாக ஒரு சீக்கிய பிரதமர் மற்றும் உயர் நீதித்துறை பதவிகள், ஆயுதப்படைகளில் கூட சிறுபான்மையினர் வகித்துள்ளனர். இந்தியா வேறு எந்த நாட்டிலிருந்தும்  பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மெகபூபா முப்தி தனது பேச்சை ஏற்று, ஜம்மு காஷ்மீரின் முதல்வராக ஒரு இந்துவை ஆதரிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.