திமுக பெண் நிர்வாகியிடம் போய் ஜாக்கெட் எப்படி போடனும்னு சொல்ல முடியுமா? திருச்சி சூர்யாவுக்கு கேள்வி

 
அலிஷா

அண்ணாமலை அனுப்பியதாக திருச்சி சூர்யா என் அலுவலகம் வந்தார் என பாஜக இளைஞர்நலன் மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா புகார் அளித்துள்ளார். 

தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்ச னையில் பல்வேறு நபர்கள் மீதான கேவலமான காணொலிகளும் உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அண்ணாமலை தான் இப்படியான ‘HONEY TRAP’ செய்கிறார் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்மையில் வெளியான ஆடியோவில் என்னை பற்றியும், எனது குடும்பம் பற்றியும் கேவலமா பேசினார். செப் 5ஆம் தேதி நான் பாஜவில் இணைந்தேன். இணைந்து 10 நாட்களுக்கு பின் திருச்சி சூர்யா எனக்கு போன் செய்தார். அதன்பின் அண்ணாமலை அனுப்பியதாக திருச்சி சூர்யா என் அலுவலகம் வந்தார். தற்பெருமை குறித்து அவ்வளவு பேசினார். காதுல ரத்தம் வரல, ஆனா அவ்வளவு பேசுனாரு. பாஜக மூத்த நிர்வாகிகள் குறித்து தவறாக பேசினார். உருவகேலி செய்தார். ஆடை உடுத்துவது குறித்து தேவையில்லாமல் பேசினார். என் உடல் உறுப்பை பற்றி திருச்சி சூர்யா தவறாக பேசினார்.அதன்பிறகு அண்ணாமலையிடம் இதுகுறித்து புகார் அளித்தேன். இருப்பினும் திருச்சி சூர்யா தொடர்ந்து எனது தொலைப்பேசிக்கு அழைத்தால் அவரது நம்பரை பிளாக் செய்தேன்.

பெண்கள் பாஜகவில் நிர்வாகியாக இருக்கக்கூடாது என திருச்சி சூர்யா நினைக்கிறார். அதனால் பெண்களை இழிவாக பேசுகிறார். தைரியம் இருந்தால் திமுக பெண் நிர்வாகியிடம் போயிட்டு ஜாக்கெட் எப்படி போடனும்னு சொல்லு பார்க்கலாம்? சொல்ல முடியுமா? எனது அலுவலகத்திற்கு சூர்யா வந்து சென்றதற்கு சிசிடிவி கேமரா ஆதாரம் உள்ளது. ஆனால் அதை நான் ரிலீஸ் செய்ய மாட்டோம். ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம். அண்ணாமலை எனக்கு ஆதரவாக இருக்கிறார்” எனக் கூறினார்.