முனாவர் பரூக்கி நிகழ்ச்சிக்கு அனுமதி, தெலங்கான முதல்வர் பிரச்சினைகளை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது.. பா.ஜ.க.

 
பண்டி சஞ்சய் குமார்

முனாவர் பருக்கி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததை குறிப்பிட்டு, சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவேண்டிய முதல்வர் பிரச்சினைகளை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

தெலங்கானாவில் கோஷாமஹால் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. டி.ராஜா சில தினங்களுக்கு முன் ஸ்டாண்ட் அப் காமெடியனர் முனாவர் பரூக்கியை விமர்சித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மதத்துக்கு எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு போராட்டம் வெடித்ததையடுத்து பா.ஜ.க.  எம்.எல்.ஏ. டி.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இருப்பினும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங் பெயிலில் வந்தார். இந்நிலையில், நேற்று தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் ராஜா சிங்கை போலீசார் கைது செய்தனர்.

: காமெடியன் முனாவர் ஃபாரூகிக்கு இடைக்கால ஜாமீன்!

ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதற்கு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசுதான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியதாவது: சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவேண்டிய முதல்வர் பிரச்சினைகளை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் மற்றும் அமலாக்கத்துறையின் சோதனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதே இந்த சதியின் நோக்கம். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக பல மாநிலங்கள் ஸ்டாண்ட்அப் காமெடியன் முனாவர் பரூக்கியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளன. அப்படிப்பட்ட ஒருவரை ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன?. 

ஏ.ஐ.எம்.ஐ.எம்.

டி.ஆர்.எஸ். அரசு ப்ரூக்கி நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசாரை நியமித்து உத்தரவிட்டது. இந்து அமைப்புகளின் எதிர்ப்பின் விளைவாக, கடந்த காலங்களில் நகைச்சுவை நடிகர்களின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன, அப்படிப்பட்ட ஒருவரை ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் முயற்சியே தவிர வேறில்லை. ஹைதராபாத் பழைய நகரத்தின் அறிவுஜீவிகளும், மக்களும் வளர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால் ஏ.ஐ.எம்.ஐ.எம். வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்ப டி.ஆர்.எஸ். மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். சதித்திட்டம் தீட்டியுள்ளது. மக்கள் தங்கள் சதித்திட்டம் குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், நிதானமாக நடந்து கொள்வதும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.