வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் கலாச்சாரத்தை காங்கிரஸ் அழித்து விட்டது... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
காங்கிரஸ்

வாக்கு வங்கி அரசியலுக்கா நாட்டின் கலாச்சாரத்தை காங்கிரஸ் அழித்து விட்டது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று, வெறுப்பு,மதவெறி,சகிப்புத்தன்மையின்மை மற்றும் பொய்களின் வைரஸ் இன்று நாட்டை ஆக்கிரமித்துள்ளது என மத்திய பா.ஜ.க. அரசையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாக தாக்கி இருந்தார். சோனியா காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது: காங்கிரஸ் வெறுப்பு வைரஸை அதன் உச்சத்தில் பல தசாப்தங்களாக (பல பத்தாண்டுகள்) வைத்திருந்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் கலாச்சாரத்தை அழித்து விட்டது. இன்று காங்கிரஸ் நமக்கு அறிவுரை கூறுகிறது. யாருடைய ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு கலவரங்கள் நிகழ்ந்தது. 

சோனியா காந்தி

பிரதமர் மோடியின் அரசாங்கம் அனைவரின் ஆதரவு, அனைவரது வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை என்ற தெளிவான கொள்கையை கொண்டுள்ளது. சோனியா காந்தியிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களால் முடிந்தவரை புத்திசாலித்தனமாக உங்கள் வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள். காங்கிரஸின் இதயத்த பார்த்தால், வகுப்பாதத்த அதிகம் பரப்பும் அமைப்பு ஏதேனும் இருந்தால் அது காங்கிரஸ்தான். தொற்றை பரப்பும் பணியை காங்கிரஸ் மேலிட தலைமை செய்கிறது. இந்துத்துவா என்பது ஐ.எஸ்.ஐ.எஸ்., போகோ ஹராம் போன்ற வெறுப்பு வைரஸ் என்று ராகுல் காந்தி கூறினார். 

தருண் சுக்

நாட்டில் நடந்த பெரிய பத்து கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இந்த கலவரங்கள் அனைத்தும் அகமதாபாத், மும்பை, பாகல்பூர் அல்லது பிற இடங்களில் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது. காங்கிரஸின் ஷாஜத் பூனவல்லா, வெறுப்பு நம்மிடையே நிச்சயமாக உள்ளது என்று கூறியிருந்தார். அதன் மிக வலிமையான முகம் ராஜஸ்தானின் கரௌலியில், இந்து எதிர்ப்பு வன்முறை நடந்தபோது காணப்பட்டது. மேலும் அங்கு போலீசார் ராஜஸ்தான் நிர்வாகத்துக்கு மவுன பார்வையாளர்களாக இருந்தனர். இன்றும் முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.