பால் தாக்கரேவின் பாதையில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா விலகி விட்டது.. பா.ஜ.க.

 
பால் தாக்கரே

பால் தாக்கரேவின் பாதையில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா விலகி விட்டது என பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், எங்களுடன் ஒரு கட்சி இருந்தது, அது போலி இந்துத்துவா பர்கா அணிந்துள்ளது. தாவூத் இப்ராஹிம் பா.ஜ.க.வில் இணைந்தால் ஒரே இரவில் அவர் புனிதர்  ஆக்கப்படுவார். தாவூத் இப்ராஹிமுக்கு அவர்களால் (பா.ஜ.க.) கட்சி சீட்டு கூட கொடுக்க முடியும். நாட்டில் நிலைமை மிகவும் ஆபத்தில் உள்ளது. நாம் வாக்களித்து ஆட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்கு வருபவர்கள் மற்றும் நம்பியவர்கள் நம்மை முதுகில் குத்துகிறார்கள் என பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. சிவ் பிரதாப் சுக்லா கூறியதாவது: உத்தவ் தாக்கரே என்ன பேசுகிறார். எந்த கொள்கைகளுக்காக பால்சாகேப் தாக்கரே அறியப்பட்டரோ அந்த கொள்கைகள் குறித்து அவர் (உத்தவ் தாக்கரே) சிந்திக்க வேண்டும். உத்தவ் தாக்கரேவின் இரத்தில் அதில் ஒரு பகுதியாவது இருக்கிறதா? இரத்தத்தை பற்றியது என்றால், அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தனது இரத்தத்தை உலர்த்தினார் என்று நினைக்கிறேன்.

சிவ் பிரதாப் சுக்லா

பால் தாக்கரேவின் பாதையில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா விலகி விட்டது. தாவூத் இப்ராஹிமை பா.ஜ.க. ஒரு போதும் பாதுகாக்கவில்லை, ஆனால் சிவ சேனா முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத குற்றவாளிகளை எங்கோ அவர்களால் ஆதாயமடைந்தால் அவர்களை பாதுகாத்தது என்று தெளிவாக கூறலாம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பி.எம்.சி.யை சிவ சேனா மையமாக வைத்தது, பி.எம்.சி. அகற்றப்பட்டால் உத்தவ் தாக்கரேவின் முதுகு உடைந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.