ராமர், கிருஷ்ணருக்கு முறையே வில், சுதர்ன சக்கரம் இருந்தது, யோகியிடம் ஆதித்யாநாத் புல்டோசர் உள்ளது.. பா.ஜ.க. எம்.பி.

 
புல்டோசர், யோகி ஆதித்யநாத்

பகவான் ராமர் மற்றும் கிருஷ்ணருக்கு முறையே வில் மற்றும் சுதர்ன சக்கரம் இருந்தது, எங்கள் பாபாவிடம் (உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்) புல்டோசர் உள்ளது என பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்தில் அரசு நிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியதாகவும், புல்டோசர்களை பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்களை இடித்ததாகவும் கூறியது. மேலும், 2022 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க. தலைவர்கள் இந்த விஷயத்தை முன்னிலை பேசியது குறிப்பிடத்தக்கது.

சாக்ஷி மகராஜ்

உத்தப் பிரதேசம் உன்னாவ் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வின் சாக்ஷி மகராஜ். கடந்த சில தினங்களுக்கு முன் உன்னாவ் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி மகராஜ் பேசுகையில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் உள்ள 99 சதவீத குடிமக்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட சொத்துக்களை புலடோசர்களை பயன்படுத்தி இடிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

பகவான் கிருஷ்ணர்

பகவன் ராமர் மற்றும் கிருஷ்ணருக்கு முறையே வில் மற்றும் சுதர்ன சக்கரம் இருந்தது, எங்கள் பாபாவிடம் (உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்) புல்டோசர் உள்ளது. இது நிலை மாபியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க. அரசு புல்டோசர்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்ததை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதல்வர் யோகியை புல்டோசர் பாபா என்றும் கேலி செய்தார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதனை கண்டு கொள்ளவில்லை.