ஞானவாபி மசூதி சர்வே விவகாரம்.. ஓவைசி ஜின்னாவாக வேண்டும் என்று கனவு காண்கிறார்... பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டு

 
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

ஞானவாபி மசூதி சர்வே விவகாரம் குறித்து அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்ததை குறிப்பிட்டு, ஓவைசி ஜின்னாவாக வேண்டும் என்று கனவு காண்கிறார் என பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் குற்றம் சாட்டினார்.

வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச் சுவரில் இந்து கடவுள்களான சிருங்கார் கௌரி, பிள்ளையார், ஹனுமன் மற்றும் நந்தி சிலைகள் இருப்பதாகவும், அதற்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சுற்றுச் சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை எதிர்தரப்பினர் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டது. இதனையடுத்து ஞானவாபி-சிரிங்கர் கௌரி வளாகத்தில் உள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே உள்ள சில பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

இந்நிலையில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, ஞானவாபி மசூதியின் சர்வே தொடர்பான சர்ச்சையை குறிப்பிட்டு, 1990களில் இருந்த வெறுப்பு சகாப்தத்தை மீண்டும் எழுப்ப பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். ஓவைசின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கூறியதாவது: ஓவைசியின் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த ஓவைசி நினைக்கிறார். அவர் ஜின்னாவாக வேண்டும் என்று கனவு காண்கிறார். 

ஹர்நாத் சிங் யாதவ்

எனவே அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சர்வே பொறுத்தவரை, எந்த நபரும், எந்த நிறுவனமும் நீதிமன்றத்தை அணுக சுதந்திரம் உள்ளது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை முஸ்லிம் தரப்பில் மேல் நீதிமன்றத்தில் சவால் செய்தபோது, அதை நீதிமன்றம் நிராகரித்தது. நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஞானவாபி மசூதி சர்வே செய்வதில் என்ன அச்சம்? அவர் சர்வே மூலம் அம்பலப்படுத்த விரும்பாத உண்மை எது? ராம ஜென்மபூமி தீர்ப்பின் மீது முஸ்லிம் சகோதரர்கள் நாட்டிற்குள் மத நல்லிணக்கத்தை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்ட விதத்தில், உள்ளூர் நீதிமன்றத்தின் பேரில் ஞானவாபி சர்வே அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.