நான் உடல் எடையை குறைத்த ஒவ்வொரு கிலோவுக்கும் தொகுதிக்கு ரூ.1,000 கோடி.. பா.ஜ.க. எம்.பி. வாக்குறுதி

 
அனில் பிரோஜியா

தான் குறைத்த ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் தனது உஜ்ஜைனி தொகுதிக்கு ரூ1,000 கோடி வழங்குவதாக பா.ஜ.க. எம்.பி. அனில் பிரோஜியா உறுதியளித்தார்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வின் அனில் பிரோஜியா. இவர் முதல் முறை எம்.பி. என்பது. அனில் பிரோஜியா முதலில் கொஞ்சம் குண்டாக  இருந்துள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  அனில் பிரோஜியாவை உடல் எடையை குறைக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து உடலை எடையை குறைப்பதில் தீவிரம் காட்டினார்.

வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

இதனால் அனில் பிரோஜியாவின் உடல் எடையை 21 கிலோ குறைந்துள்ளது. தான் குறைத்த ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் தனது உஜ்ஜைனி தொகுதிக்கு ரூ1,000 கோடி வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி தற்போது 21 கிலோ உடல் எடையுள்ள குறைத்துள்ள அனில் பிரோஜியா தனது தொகுதிக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது.

பிரதமர் மோடி, அஹானா

பா.ஜ.க. எம்.பி. அனில் பிரோஜியா கடந்த புதன்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி அனில் பிரோஜியாவின் 5 வயது மகள் அஹானாவிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது அஹானாவிடம் நான் யார் என்று உனக்கு தெரியுமா என்று பிரதமர் கேட்டார். அதற்கு சிறுமி அஹானா, ஆம், நீங்கள் மோடி ஜி, நீங்கள் தினமும் டிவியில் வருகிறீர்கள். இதனையடுத்து நான் என்ன வேலை செய்கிறேன் என்று தெரியுமா  என மோடி கேட்டார். அதற்கு சிறுமி, நீங்கள் லோக் சபா டிவியில் பணிபுரிகிறீர்கள் என்று பதில் அளித்தார். இது அங்கியிரந்த அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, அஹானாவுக்கு சாக்லேட்களை வழங்கினார்.