முதல்வர் ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு - பொன்னாரும் சந்தித்தார்

 
mla

தமிழக பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.  இவர்களுடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் ஸ்டாலினை சந்தித்தார். 

இந்த சந்திப்பில் பாஜக எம்எல்ஏக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.   நெல்லையப்பர் கோவிலுக்கு அண்டர் கிரவுண்ட் கேபிள் அமைத்து தர வேண்டும் மற்றும் தேர்வு வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார் நயினார் நாகேந்திரன்.

p

 முடக்குறிச்சி தொகுதியில் எம்எல்ஏ சரஸ்வதி , தனது தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டுவர மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தமிழக அரசு அதற்கு இடம் அளிக்க ஒப்புதல் தர வேண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார் .

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன்,   மதக் கலவரங்களை தடுக்க கூடிய வகையில், இனிமேல் ஒரு வழிபாட்டுத் தளம் இருக்கிறது என்று சொன்னால் அடுத்த மதத்திற்கான வழிபாட்டு தளம் கட்ட வேண்டுமானால் அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று தான் கட்ட வேண்டும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

 மேலும்,  அரசு நிலங்கள் அறநிலைக்கு துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாக கூறினார்.   கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.