மூணாங்கிளாஸ்...கோவில்ல விபூதி வித்துக்கிட்டு இருந்தீங்க...செல்லூர் ராஜூவை கலாய்க்கும் பாஜக நிர்வாகியின் ஆடியோ

 
ஔ

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக நிர்வாகியின் ஆடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர், செல்லூர் ராஜூவிடம்  பேசும் அந்த ஆடியோவில்,   ’’ஹலோ’ என்கிறார் அந்த பாஜக நிர்வாகி.  அதற்கு செல்லூர் ராஜு,   ’’யாரு ’’என்று கேட்கிறார்.

செ

 உடனே அவர் ,  ‘’செல்லூர் ராஜு அண்ணனா?’’ என்றுகேட்கிறார்.  ’’ஆமாம்’’ என்று சொன்னதும்,   ’’. அண்ணே வணக்கம் சுரேஷ்குமார் பேசுறேன் .. அண்ணனுடைய பேட்டி பார்த்தே..ன் அதுல அவங்க துரும்பை  போட்டால் நாங்கள் தூணைப் போடுவோம்  என்று சொல்லி இருந்திங்க.. உண்மையிலேயே அது பெரிய இதுன்னே.. நல்லா இருந்ததுன்னே..’’ என்று சொல்லிவிட்டு,   ’’அண்ணே நீங்க முன்னாடி மீனாட்சி அம்மன் கோவிலில் விபூதி ஏதோ வித்துட்டு இருந்தீங்களே...’’ என்று சொல்ல,   ’’ விபூதி கடை இல்ல  பிரசாத கடை... கொஞ்சநாள்...’’ என்று சொல்கிறார் செல்லூர் ராஜு .

பொ

அதன் பின்னர் அந்த பாஜக நிர்வாகி,   ’’அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி சரியாண்ணே... நீங்க ஒரு மூணாங்கிளாஸ் வகுப்பு படித்த ஆளு... நீங்க என்னவெல்லாம் சாதனை பண்ணுனீங்க,  என்ன எல்லாம் செஞ்சீங்க என்பது எல்லாம் தெரியும்.   தர்மாகோல் விட்டு தமிழகத்தையே அலற வீட்டீங்அ.. நீங்க இங்கே அவ்வளவு பெரிய விஞ்ஞானி.  சரியாண்ணே..’’ என்று தொடர்ந்து செல்லூர் ராஜுவை கலாய்த்து பேசிய பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகியின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 அதிமுகவுடன் கூட்டணி வைத்து கூட்டணி பலத்தினால் நான்கு எம்எல்ஏக்களை பெற்றிருக்கிறது பாஜக என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் சொல்லி வரும் நிலையில் ,   பாஜக தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக வளர்ந்து விட்டது.   கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும்.  நாடாளுமன்றத் தேர்தலில் 25 எம்பிக்களை தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்புவோம் என்று அண்ணாமலை சொல்லி வரும் நிலையில் பாஜக தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று விபி துரைசாமி,  சசிகலா புஷ்பா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் சொல்லி வருவதால் அதிமுகவினர் கடுப்பாகி கிடக்கிறார்கள்.   இதனால் பொன்னையன் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கிறார் .  அதற்கு அடுத்தபடியாக செல்லூர் ராஜூ வெடிக்க தொடங்கியிருக்கிறார்.

ன்ன்

 தமிழகத்தில்  ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது.   ஏதோ நூறு பேர் ஆயிரம் பேரைக் கூட்டி ஒரு போராட்டம் நடத்தினால் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறமுடியாது .வளரவும் முடியாது என்று பாஜகவை கடுமையாக தாக்கினார் அதிமுக மூத்த தலைவர்கள் பொன்னையன்.   அவர்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருந்தார்.

 ஆனாலும் மீண்டும் பாஜகவுக்கு எதிராக வெடித்துவிட்டார்.   நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் தயார் அதேமாதிரி அவர்கள் சொல்லத் தயாரா என்று சவால் விட்டார்.   இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு  பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்.   அதிமுகவை துரும்பு அளவுக்கு பாஜக விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்று வி.பி.துரைசாமிக்கு பதிலடி கொடுத்தார். 

ஔட்

 மத்திய அரசில் பதவி பெறுவதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்.  தமிழ்நாட்டை பொறுத்தவரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை தனித்தே போட்டி என்று சொல்ல அதிமுக தயார்.  ஆனால் அவர்கள் தயாரா?  நாங்கள் காக்கா கூட்டம் கிடையாது கொள்கை கூட்டம். இரைகளை போட்டால் காக்காய்கள் கூடத்தான் செய்யும்.  இரைகள்  முடிந்து விட்டால் பறந்து விடும் என்று சொன்னார்.

 செல்லூர் ராஜு பேசிய பேச்சு பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன . இந்த நிலையில்தான் பாஜகவின் வழக்கறிஞர் அணி நிர்வாகி ஒருவர் செல்லூர் ராஜூக்கு  போன் போட்டு கலாய்த்திருக்கிறார்.  அந்த ஆடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.