ஆடியோ லீக்! ‘’சிம் காரை நிப்பாட்டுறது நிப்பாட்டுறதுதான்..’’- மாணவர் அமைப்பினரின் திட்டம்

 
cm

 முதல்வர் மு .க. ஸ்டாலின் வாகனத்தை வழிமறிக்க வேண்டும் என்பதற்காக மாணவர் அமைப்பினர் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று மாணவர்களுக்கு மாணவர் அமைப்பினர் திட்டம் தீட்டி அறிவித்த ஆடியோ லீக் ஆகி தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

cc

 கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.   மாணவியின் மரணத்தில் மரணம் உள்ளது என்று சொல்லி மாணவ அமைப்பினரும் பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.   இதன் தொடர்ச்சியாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து மெரினாவில் ஏராளமான போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த நிலையில் போராட்டத்தின் இன்னொரு வடிவமாக முதல்வர் மு. க ஸ்டாலின் வாகனத்தை வழிமறிக்க வேண்டும் என்று மாணவ அமைப்பினர் திட்டம் தீட்டி உள்ளனர்.  இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாணவர்களும் ஒன்று திரள வேண்டும் என்றும்,  அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வாட்ஸ் அப்பில் பரவும்  ஆடியோ லீக் ஆகி இருக்கிறது.  இது தமிழக அரசை கடும் அதிர்ச்சிக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

mk

 அந்த ஆடியோவில்,   ‘’கொடுக்கப்பட்டிருக்கும் லொகேஷனுக்கு எல்லோரும் காலை 10 மணிக்கு வந்திருங்க .  பத்து முப்பது மணிக்கு தான் சிஎம் அந்த பக்கமாக போகிறார்.   அந்த நேரத்தில் அவரது காரை தடுத்து நிறுத்தினால் சரியாக இருக்கும்.  சிஎம் பார்வைக்கு நம் போராட்டம் நேரடியாக தெரிய வேண்டும்.  இந்த போராட்டத்தை நாம் அறவழியில் செய்வோம் வன்முறை வேண்டாம்.  

 இந்த போராட்டத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.  சைலேந்திரபாபு அந்தக் கல்லூரியின் பிரின்ஸ்பால் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி வருகிறார்.  அரசாங்கமும் அந்த பள்ளிக்கு உறுதுணையாக நிற்கிறது.  அதனால் நாமெல்லாம் ஒருங்கிணைந்து கண்டிப்பாக போராடுவோம் ’’என்றும்,  ’’இதையே மற்ற அனைவருக்கும் சொல்லிவிடுங்கள்’’ என்றும் அந்த நபர் சொல்ல ,  இன்னொரு நபர் பேசும்போது,   ’’எல்லோரும் சென்னையில் காலை 10 மணிக்கு வாங்க .எல்லாரும் கண்டிப்பாக வரவேண்டும்.   மற்ற அனைவருக்கும் இந்த தகவலை சொல்லுங்க.   சிஎம் காரை நிப்பாட்டுறது நிப்பாட்டுறது தான்... எங்க இருந்தாலும் சென்னைக்கு வாங்க.   என் வாய்ஸ்க்கு கீழே லொகேஷனை போடுறேன்.  கண்டிப்பாக எங்க பக்கத்துல இருந்து 2500 பேரை அனுப்பி வைப்போம்’’ என்கிறார்.

 இந்த ஆடியோ தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.