தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.. பாதியில் வெளியேறிய நாராணயசாமி

 
gஉ

காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.   இந்த தாக்குதலால் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

புதுச்சேரி மாநிலத்தில் வைசியால் வீதியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் குண்டூர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி , மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

குன்

 கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் அவரை மாற்ற வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலில் ஈடுபட்டதால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

 பின்னர் மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிராக  கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.   இதை அடுத்து கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்  குண்டூர் ராவ்.  அப்போது கட்சியினர் அவரை முற்றுகையிட்டனர் .   அதன் பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு மாநில தலைவர் வாகனத்தில் ஏறி புறப்பட்டு  சென்றார் .

அப்போது  பொறுப்பாளரை கட்சியினர் அங்கிருந்து போகவிடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.  இதனால் காங்கிரஸ் அலுவலகம்  அமைந்திருக்கும் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.