ஓபிஎஸ் கையில் இருக்கும் அணுகுண்டு! ஆடிப்போன எடப்பாடி!

 
ஒ

ஓபிஎஸ் மவுனத்திற்குப் பின்னால் இருக்கும் அணுகுண்டை அறிந்து ஆடிப்போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 பொதுக்குழு கூட்டம் பற்றி விவாதிப்பதற்காக கூடுகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் எம்ஜிஆர் மாளிகைக்குச் செல்ல அங்கே முன்கூட்டியே திட்டமிட்டபடி ஒற்றை தலைமை வேண்டும் என்ற விவகாரத்தை எழுப்பி இருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.  அதோடு மட்டுமல்லாமல் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் எடப்பாடி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையை ஏற்கவேண்டும் என்று சொல்ல கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஓபிஎஸ்.  

எடப்பாடி டீமின் மூவ்களை கவனித்து வந்த ஓபிஎஸ்,  ஒருவேளை இப்படி நடக்கலாம் என்று கணித்து,  அப்படி நடந்தால் என்ன செய்யணும் என்று ஆதரவாளர்களிடம் சொல்லி வைத்திருந்ததால்தான்,   எம்.ஜி.ஆர். மாளிகையின் உள்ளே எடப்பாடி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையை ஏற்கவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க,  மாளிகைக்கு வெளியே ஓபிஎஸ்தான் ஒற்றைதலைமையை ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.  அதன்பின்னர் அதிமுகவில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது.  ஈபிஎஸ் -ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டிம் முழக்கம் எழுப்பி வருகின்றனர் .  

எ

 இதுவரைக்கும் தலைமை குறித்த பேச்சு வந்த போதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ.  பன்னீர்செல்வம் வளர விடாமல் தடுத்து விட்டனர்.  ஆனால் இந்த முறை ஒற்றை தலைமை பேச்சை எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்து இருக்கும் நிலையில்,  ஓ. பன்னீர்செல்வம் அதுகுறித்து எதுவும் சொல்லாமல் மவுனமாகவே இருந்தார்.

ஓபிஎஸ் மவுனத்திற்கு பின்னால் இருந்த அணுகுண்டு இப்போதுதான் எடப்பாடிக்கு தெரியவந்திருக்கிறது.   ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே அதிமுகவின் சீனியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் உடனான  பேச்சுவார்த்தையின்போது,   ‘’ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் முதல் கிளைச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரைக்கும் நடந்து முடிந்துவிட்டது .  இதற்கு ஒப்புதல் வாங்குவதற்காகத் தான் இந்த பொதுக்குழு கூடுகிறது.  ஆனால் இந்த தேர்தல் ஐந்து ஆண்டுகள் வரை செல்லும் . அப்படி இருக்கும்போது இந்த பதவிகளை எல்லாம் நீக்கிவிட்டு எப்படி ஒரே தலைமையைக் கொண்டு வர முடியும்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஓபிஎஸ்.

எ

அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள்,  ‘’1.12.2021 இல் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டன.  அதன்படி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்வார்கள் என்றும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு மாற்றாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப் படும் பட்சத்தில் இறுதி முடிவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்துவார் என்றும் , சட்ட விதிகளை இயற்றவும் திருத்தவும் நீக்கவும் பொது குழுவுக்கு அதிகாரம் தொடர்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

 அதேநேரம் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் புதிய தேர்வு முறையை மாற்ற பொது குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும்,  திமுகவின் செயற்குழு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.  அப்படி இருக்கும்போது இந்த புதிய தேர்வு முறையை மாற்ற பொது குழுவுக்கு அதிகாரம் இல்லை’’ என்று சொல்ல , அது சரிதான் என்று சீனியர்கள் தலையசைத்திருக்கிறார்கள்.

ப்

 ஓபிஎஸ் சொன்ன இந்த தகவலை முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் ,உதயகுமார், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் எடப்பாடி இடம் சொல்லியிருக்கிறார்கள் . இதை கேட்டு எடப்பாடி கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

 ஊரெல்லாம் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிறார் என்ற ஒரே பேச்சாக இருக்கும் உலகில் ஓபிஎஸ் இப்படி ஒரு அணுகுண்டை வைத்திருக்கிறாரே என்று எடப்பாடி ஆடிப்போயிருகிறாராம்.  

செயற்குழுவின் சிறப்பு தீர்மானத்திற்கு எதிராக நடந்தால்,  அதையே பெரும் பிரச்சனையாக முன்னெடுத்துவிடுவார் ஓபிஎஸ்.  அப்புறம் நமக்கு பெரும் சிக்கலாகிவிடுமே என்று ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறாராம் எடப்பாடி.