ராத்திரியில் ரவுடி கூட தோப்புல உனக்கு என்ன வேலை.. இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வெளியில வரும்..

 
w

அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம்.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

ro

இதற்கு, பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்,  டிசம்பர் 9 2022 இரவு நீங்கள் எப்படி “எடுத்தோம், கவிழ்த்தோம்” என்பது அனைவருக்கும் தெரியும். மறுநாள் காலை டிசம்பர் 10  2022, நீங்கள் விமானத்தின் அவசரகால கதவை எப்படி “திறந்தோம், மூடினோம்” என்பது கூட அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருக்கிறார்.

9.12.2022 இரவு அண்ணாமலை எங்கே சென்றார். என்ன செய்தார் என்பது தனக்கு தெரியும் என்கிற விதத்தில் காயத்ரி ரகுராம் சொல்லி இருப்பதற்கு அண்ணாமலை ஆதரவாளரும், பாஜகவில் ராஜினாமா செய்திருக்கும் திருச்சி சூர்யா சிவா,  ’’நீயும் இப்படி எங்க போன வந்த என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  ராத்திரி அதுவும் ரவுடி கூட தோப்புல உனக்கு என்ன வேலை. நீதானே போட்டோ -வீடியோ கேட்டுக்கிட்டே இருந்த. இதுக்கு மேலயும் ஏதாச்சு பேசுனா,  இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வெளியில வரும் . பெண்களுக்கு உரிமை தேடித் தர மூஞ்சிய பாரு’’ என்று பதிலடி கொடுத்திருந்தார்.

தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது என்று காயத்ரி சொல்லி இருப்பதற்காகத்தான்,  பெண்களுக்கு உரிமை தேடித் தர மூஞ்சிய பாரு என்கிறார் சூர்யா சிவா.

ஆனால்,  அதனபிறகும் விட்டபாடில்லை காயத்ரி.   கர்நாடக வளர்ப்பு மகன் ஏன் IPS பதவியை ராஜினாமா செய்தார்? அதற்கு முன் கர்நாடகா காங்கிரஸ் கட்சியுடன் அவர் நடத்திய திரைமறைவு நாடகம் என்ன. கர்நாடக பாஜகவிடம் அடைக்கலம் தேடியது ஏன்? அதற்காக செய்த தன் மாநிலத்தில் சேர்க்காமல் துரத்தி அடிக்க காரணம் என்ன! Source ஆரம்பிக்கலாமா? என்று கேட்கிறார்.