நாட்டை வழிநடத்த சரியான நபர் ராகுல் காந்திதான்... அசாம் காங்கிரஸ் நம்பிக்கை
நாட்டை வழிநடத்த சரியான நபர் ராகுல் காந்திதான் என்று அசாம் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
அசாம் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் அப்துல் அஜீஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அசாமில் காங்கிரஸூக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நீங்கள் பார்த்தால் தெரியும், தற்போதைய ஆட்சியில் உள்ள அனைத்து மக்களில் (தலைவர்கள்) பெரும்பகுதியினர் முன்பு காங்கிரஸில் இருந்தவர்கள். உருவான குறிப்பிட்ட சூழல் (கருத்து வேறுபாடு) காரணமாக அவர்கள் பா.ஜ.க.வுக்கு சென்றனர். தற்போது எங்கள் கட்சியை அசாம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபன் போரா சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எங்கள் தலைவர்கள் குறிப்பாக எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 எம்.பி.க்கள் சிறப்பாக பணிகளை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களுக்கும் சொந்தமானது. நூறு ஆண்டுகள் பழமையான கட்சி அது. அரசியல் மற்றும் சுதந்திர இயக்கம் வேறு என்பது உண்மை. நாங்கள் திருப்திப்படுத்தும் அரசியல் செய்திருந்தால், மாநிலத்திலும், மத்தியிலும் இவ்வளவு காலம் ஆட்சி நடத்தி இருக்க முடியாது. காங்கிரஸை எதிர்க்க முயலும் கட்சிகளால் திருப்திப்படுத்தும் கதை உருவாக்கப்படுகிறது. அனைத்து விளிம்பு நிலை மக்களின் குரலை காங்கிரஸில் எழுப்புவோம். முதல் நாளிலிருந்தே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கம் தேர்தல் தொடர்பானது அல்ல.
தற்போதைய அரசின் சில தவறான முடிவுகளால் சகிப்புத்தன்மை இல்லாத சூழலுக்கு எதிராக இந்த நடைப்பயணம் நடக்கிறது. நாட்டின் சூழலை மேம்படுத்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல் காந்தியை விமர்சிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. இந்த நடைப்பயணம் வரும் நாட்களில் காங்கிரஸில் தாக்கத்தை ஏற்படுத்தும். அசாமில் மாநில காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நடத்தினோம். நாட்டை வழிநடத்த சரியான நபர் ராகுல் காந்திதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.