காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்கலாம்... அசாம் காங்கிரஸ் எம்.பி.

 
பிரியங்கா காந்தி

திருமணமாகி விட்டதால் பிரியங்காந்தி காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல ஆகையால் காந்தி குடும்பத்தை சாராத காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி இருக்க முடியும் என்று அசாம் காங்கிரஸ் எம்.பி. அப்துல் கலீக் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் அந்த கட்சிக்குள் பல அதிரடி நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ள நபராக கருதப்படும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கலகம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அசோக் கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை முதல்வராக்கினால் நாங்கள் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல் விடுத்தனர்.

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

இதனால் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து  அசோக் கெலாட் நீக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். திக்விஜய சிங்கை தவிர்த்து, கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரும் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அப்துல் கலீக்

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்கலாம் என காங்கிரஸ் எம்.பி. ஒருவர் குரல் கொடுத்துள்ளார். அசாம் காங்கிரஸ் எம்.பி. அப்துல் கலீக் டிவிட்டரில், திருமணான பெண்ணான பிரியங்கா காந்தி, இந்து மரபுகளின்படி இனி காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல ஆகையால் காந்தி அல்லாத கட்சியின் முதல் தலைவராக அவர் இருக்க முடியும் என்று பதிவு செய்து உள்ளார்.