யாரோ ஒருவர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.. ராகுல் காந்தியை தாக்கிய அசாம் பா.ஜ.க. முதல்வர்

 
ராகுல் காந்தி

யாரோ ஒருவர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று ராகுல் காந்தியை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மறைமுகமாக தாக்கினார்.


உத்தரகாண்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உரையாற்றுகையில் கூறியதாவது: சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை ராணுவத்திடம் கோர ராகுல் காந்திக்கு உரிமை இல்லை. இவர்களின் மனநிலையை பாருங்கள். ஜெனரல் பிபின் ராவத் நாட்டின் பெருமைக்குரியவர்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது அவர் தலைமையில்தான். ராகுல் காந்தி தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா, இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா?. இவ்வாறு அவர் பேசியிருந்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்நிலையில், தற்போது மீண்டும் ராகுல் காந்தியை ஹிமந்தா பிஸ்வா சர்மா மறைமுகமாக தாக்கியுள்ளார்.

பிபின் ராவத்

இந்நிலையி் நேற்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், கர்மா நம்மை தாக்குகிறது. எதிரி நிலத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் ஒரு ராணுவ வீரரின் வலியை, ஒரு காங்கிரஸ் தலைவர் தனது (ராணுவ வீரரிடம்) தேசபக்தி செயலுக்கு ஆதாரம் கோரும்போது, அதை நாம் ஒருபோதும் உணரமாட்டோம், யாரோ ஒருவர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்று பதிவு செய்து இருந்தார்.