எடப்பாடியாரை வீதிக்கு வரச் சொல்வது சரியானது அல்ல; புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை - செம்மலை பதிலடி

 
se

எடப்பாடியாரை வீதிக்கு வரச் சொல்வது சரியானது அல்ல;  எல்லாமே எடப்பாடியாருக்கு சாதகமாக இருக்கிறது.  புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை என்று ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செம்மலை.

ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.  இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்த ஒபிஎஸ் தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்கும் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் தங்களுக்குத் தான் கிடைக்கும் என்று உறுதியாக கூறியிருக்கிறார். பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும் என்றும் சசிகலா உட்பட கட்சிக்கு பாடுபட்டவர்கள் உடன் அதிமுக இயங்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

e

 இது குறித்து அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை பதிலடி கொடுத்திருக்கிறார்.   அதிமுக தலைமை கழகம் எடப்பாடியார் வசம் இருக்கிறது .   நீதிமன்றமே எடப்பாடியார் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  வங்கி கணக்கு எடப்பாடியார் தரப்பு பொருளாளர் செயல்பட அனுமதி வழங்கி இருக்கிறது.   எடப்பாடியார் அனுப்பிய வரவு செலவு கணக்குகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு இருக்கிறது.

 இந்த நிலைமையில் கட்சி எடப்பாடியார் தலைமையில் இல்லை . எங்களுக்குத் தான் சொந்தம் என்று ஓபிஎஸ் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. என்று கூறி இருக்கிறார்.

so

 அவர் மேலும்,   எடப்பாடியார் தலைமை பண்பை நிரூபிக்க தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை.  பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள்.  கட்சி ஆட்சி சிறப்பாக வழி நடத்தி தலைமை பண்பை  எடப்பாடியார் ஏற்கனவே நிரூபித்து விட்டார்.  புதிதாக அவர் நிரூபிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.  அவர் புதிய கட்சியும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருக்கும் செம்மலை,

 எடப்பாடியாரை வீதிக்கு வரச் சொல்வது சரியானது அல்ல.  பொதுக்குழு தொடர்பாக இரண்டு நீதிபதிகளடங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடியாருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.  மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது என்கிற நிலையில் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுகின்றவர்கள் பொதுக்குழு கூட்டுவதாக சொல்வது அர்த்தம் எதுவும் இல்லை .   சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் சொல்லுவது முந்தைய நிலைக்கு எதிர்மறாக இருக்கிறது. ஒன்றரை கோடி பக்கம் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக இல்லாத ஒன்றை கற்பனையாக சொல்கிறார்கள்.   எடப்பாடியார் பக்கம் தான் தொண்டர்கள் அனைவரும் உள்ளார்கள்.  கட்சி முழுவதும் எடப்பாடியாரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.