இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள் தான்.. அஸ்வினி குமார் சவுபே

 
அஸ்வினி குமார் சவுபே

இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே

ஹைதராபாத்தில் இந்து மதம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அஸ்வினி குமார் சவுபே பேசுகையில் கூறியதாவது:  நமது நாடு அறிவு பூமி என்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் இந்தியராக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும். இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை.

இந்து குடும்பம்

இந்து என்ற வார்த்தையை  வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒரு போதும் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கூறுகிறேன். இந்து என்பது ஒரு மதத்தை விட மேலானது. அது ஒரு புவியியல் அடையாளம். இந்து என்பது புவியியல் அடையாளம். இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோகன் பகவத்

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இநதியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் இந்து மூதாதையர்கள் உள்ளனர். இது அடிப்படையில் அனைவரையும் இந்துக்களாக மாற்றுகிறது என தெரிவித்து இருந்தார். மோகன் பகவத்தின் இந்த கருத்து மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேச்சில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.