நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்.. காங்கிரஸ் தாக்கு

 
மோடி

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மதத்தின் அடிப்படையில் அரசியல் விளையாடுகிறது. இது போன்ற அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் இந்த நாட்டின் பிரதமர் (மோடி). பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கருத்துகள் மற்றும் சிந்தனை பள்ளி ஒரே மாதிரியானவை, பிறகு ஏன் இரு கட்சிகளும் இணையக்கூடாது. 

அசோக் கெலாட்

ராஜஸ்தானில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்தும், அவர் விசாரணைக்கு உத்தரவிடவில்லை. எதிர்காலத்தில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, கலவர வழக்குகளை விசாரிக்க உத்தரவிட அவர் (அமித் ஷா) ஏன் தைரியம் இல்லை. சமீபத்திய கலவர வழக்குகளில் அனைத்து குற்றவாளிகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள், இத்தாலியை சேர்ந்தவர்கள் அல்ல. 

அமித் ஷா

வகுப்புவாத வன்முறை சம்பவங்களால் எந்த அரசியல் கட்சி பயனடைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கலவர வழக்குகளை விசாரிக்க வேண்டும். கலவரத்தில் காங்கிரஸூகு்க தொடர்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் ஜோத்பூர் மற்றும் கரௌலியில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.